ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் இந்தியா ஃபைனல் ஆடணும்.. ஆசையைக் கூறிய ஹைடன்!

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் இந்தியா ஃபைனல் ஆடணும்.. ஆசையைக் கூறிய ஹைடன்!

மேத்யூ ஹைடன்

மேத்யூ ஹைடன்

இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustralia

  டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்தார்.

  டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தேர்ச்சி அடைந்தது.

  இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதும்.

  இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பேசிய அவர், இந்த நாள் மிகவும் சிறப்பானது. இந்த ஆட்டத்தில் எல்லோரும் பாபர் - ரிஸ்வான் பற்றி தான் பேசுவார்கள் என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது எனவும் ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீச முடிந்ததால் ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொள்வது கடினமாகி விட்டது என தெரிவித்தார். இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோதினால் அமர்க்களமான ஆட்டமாக அமையும் என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: India Vs England, India vs Pakistan