பாகிஸ்தான் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று கராச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.
முதிலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களுடன் வெளியேற, அவருடன் களமிறங்கிய இமாம் உல் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷான் மசூத் 3 ரன்களும் சௌத் ஷகீல் 22 ரன்களும் எடுத்து சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர்
கேப்டன் பாபர் ஆசம் மட்டும் நிதானமாக ஆடி தனது விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். அவருடன் 6வது வீரராக களமிறங்கிய சர்ஃப்ராஸ் அகமது பாபருடன் இணைந்தார். இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளித்து ஆடி 196 ரன்கள் சேர்த்தனர். சரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக சர்ஃப்ராஸ் 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்திருந்தபோது அஜாஸ் படேலின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு பக்கம் பாபர் நிதானமாக ஆடி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் பதிவுசெய்த 9வது சதம் இதுவாகும்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 317 ரன்கள் சேர்த்தது. பாபர் 161 ரன்களுடனும், அகா சல்மான் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பாக அஜாஸ் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கேப்டன் டிம் சௌதி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதலிரு விக்கெட்டுகள் ஸ்டெம்பிங் முறையில் வீழ்த்தப்பட்டன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட்டில் முதல் இரு விக்கெட்டுகள் ஸ்டெம்பிங் முறையில் வீழ்த்தப்பட்டது இதுவே முதல் நிகழ்வாக கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Pakistan cricket