Home /News /sports /

ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்..!

ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்..!

உமர் அக்மால்

உமர் அக்மால்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருப்பவர் உமர் அக்ம்ல். ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக உமர் அக்மல் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் உமர் அக்மல் பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஊழல் சட்ட விதி 4.7.1-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அவர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். அவர் மீதான தடை பிறபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மாற்றுவீரை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தேர்ந்தெடுக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Also Read : தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

29 -வயதான அக்மல், கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளிலும் உமர் அக்மல் விளையாடியுள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Umar Akmal

அடுத்த செய்தி