பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் போட்டி ரத்து!

PAK vs SL

  • Share this:
பத்து வருடங்களுக்கு பின் காராச்சியில் நடக்க இருந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இலங்கை வீரர்கள் வந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லையென்றாலும் லேசான காயம் ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணமாக குறைபாடு காரணமாக இலங்கை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக தாய்நாட்டிற்கு திரும்பினார். இதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மற்ற நாடுகள் முன்வரவில்லை. ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடியது.

பத்து வருடங்களுக்கு பின் இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி கராச்சியில் இன்று தெடாங்க இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.


பாகிஸ்தான் போட்டியை கராச்சியில் நேரில் பார்க்க இருந்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: