முகப்பு /செய்தி /விளையாட்டு / சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் Yasir Shah மீது போலீசார் வழக்குப்பதிவு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் Yasir Shah மீது போலீசார் வழக்குப்பதிவு

Yasir shah

Yasir shah

கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான பாலியல் புகார் பாகிஸ்தானை அலற வைத்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டிய புகாரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. லெக் ஸ்பின்னரான இவர் 2014-ல் அறிமுகமாகி 46 டெஸ்ட்களில் 235 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 50, 100, 200 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனையும் பல்வேறு சாதனைகளையும் யாசிர் படைத்திருக்கிறார். இந்நிலையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயதாகும் சிறுமி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

சிறுமி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, “யாசிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார்.

ஃபர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். மேலும் தனக்கு சிறு வயது பெண்களை மிகவும் பிடிக்கும் என கூறினார்.

இதையும் படிங்க:  ரிஸ்வான், பாபர் ஆசம் போல் வீரர்கள் தங்களிடம் இல்லை என இந்தியா கூறும்- ரஷீத் லடீப்

நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. எனக்கு மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது. உயர் அதிகாரிகளையும் நன்றாக தெரியும். எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் யாசிர் ஷாவும், அவரின் நண்பர் ஃபர்ஹானும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோக்களாக எடுத்து வைத்து மிரட்டி வருகிறார்கள். யாசிர் அவரின் நண்பர் செய்த இக்கொடூர செயலை மறைத்து அவருக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷாலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:  Ashes 2021 Adelaide test-சடங்கு முடிந்தது- இங்கிலாந்து படுதோல்வி- ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா 2-0

இதனிடையே போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை தொடர்பு கொண்டு உனக்கு ஒரு ஃபிளாட் வீடும், 18 அடுத்த ஆண்டுகளுக்கு மாதம் மாதம் பணமும் தருவதாக கூறினார் என சிறுமி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான பாலியல் புகார் பாகிஸ்தானை அலற வைத்திருக்கிறது.

First published:

Tags: Pakistan cricket, Pakistan Cricketer, Pakistan News in Tamil, Rape