இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் இன்று பாகிஸ்தான் 246 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் இந்தியாவை விட கீழே இறங்கி 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்டுள்ளது.
இலங்கை அணி 3ம் இடத்துக்கு முன்னெற, தென் ஆப்பிரிக்கா அணி அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது. முதல் டெஸ்ட்டில் வென்ற பிறகு பாகிஸ்தான் 3ம் இடத்துக்குச் சென்றது. இந்திய அணி இங்கிலாந்திடம் பர்மிங்ஹாம் டெஸ்ட்டில் செம உதை வாங்கியதால் கீழே இறங்கியது, ஆனால் பாகிஸ்தான் தற்போது இந்தியாவுக்குக் கீழே இறங்கிவிட்டது.
இந்தியாவின் வெற்றி சதவீதம் 52.08%, பாகிஸ்தானின் வெற்றி வீதம் 51.85, எனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பெரிய இடைவெளியோ வித்தியாசமோ இல்லை. தென் ஆப்பிரிக்கா 71.43% உடன் டாப்பில் உள்ளது. 70% உடன் பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது அது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடும்போது நிச்சயம் முதலிடத்திலிருந்து கீழே இறங்கி விடும், ஏனெனில் இந்த டெஸ்ட் இங்கிலாந்து புதிய இங்கிலாந்து ஆகும், பேஸ்பால் என்கின்றனர், வேகபந்து வீச்சை இறங்கி வந்து அடிக்கின்றனர், பெரிய பெரிய இலக்குகளை 4வது இன்னிங்ஸில் அனாயசமாக விரட்டுகின்றனர்.
எனவே இங்கிலாந்து பின்னால் இருந்தாலும் இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் வென்றால் நிச்சயம் இந்தியாவையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC World Test Championship, India and Pakistan, Sri Lanka