Home /News /sports /

PAKvSA | தென்னாப்பிரிக்கா அணிக்கு 309 ரன்களை இலக்காக நிர்ணயத்தது பாகிஸ்தான்!

PAKvSA | தென்னாப்பிரிக்கா அணிக்கு 309 ரன்களை இலக்காக நிர்ணயத்தது பாகிஸ்தான்!

PAKvSA

PAKvSA

ICC World Cup 2019 | PAKISTAN vs SOUTH AFRICA | 40 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடி வந்த பாகிஸ்தான் பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

  • News18
  • Last Updated :
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் 308 ரன்களை குவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரின் 30-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. லண்டன் லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக், ஜமான் களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவருமே 44 ரன்களில் இம்ரான் தஹீர் பந்துவீச்சில் அவுட்டாகினர்.

3-வது வீரராக களமிறங்கிய பாபர் அஷாம் 80 பந்துகளில் 69 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். 40 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடி வந்த பாகிஸ்தான் பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.



பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் சிதற விட்டார். ஹாரிஸ் சோகில் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் உடன் 89 ரன்கள் விளாசினார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி