பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

#PAKvAUS: #PakistanCricketTeam register embarrassing record | ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.

news18
Updated: March 30, 2019, 1:03 PM IST
பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான். (CricketAustralia)
news18
Updated: March 30, 2019, 1:03 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 வீரர்கள் சதமடித்தும் வெறும் 6 ரன்னில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னோட்டமாக பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி நேற்று துபாயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, மேக்ஸ்வெல் 98 ரன்களும், கவாஜா 62 ரன்களும், கேரி 55 ரன்களும் எடுத்தனர்.

Glenn Maxwell, மேக்ஸ்வெல்
2 ரன்னில் சதத்தை தவறவிட்ட மேக்ஸ்வெல். (ICC)


இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், நிதானமாக விளையாடிய அபித் அலி (112) மற்றும் ரிஸ்வான் (104) ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Australia Cricket Team, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (ICC)


2 வீரர்கள் சதமடித்தும் வெறும் 6 ரன்னில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி மோசமான சாதனையைப் படைத்தது. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஷிங் போட்டியில் 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் செய்தது.
Loading...
7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

Also Watch...First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...