பாகிஸ்தான் அணியை வேற லெவலுக்கு கொண்டு செல்வேன் - அமெரிக்காவில் இம்ரான் கான் சூளுரை

எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும்.

Vijay R | news18
Updated: July 22, 2019, 7:59 PM IST
பாகிஸ்தான் அணியை வேற லெவலுக்கு கொண்டு செல்வேன் - அமெரிக்காவில் இம்ரான் கான் சூளுரை
இம்ரான் கான்
Vijay R | news18
Updated: July 22, 2019, 7:59 PM IST
அடுத்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை சிறந்த அணியாக மாற்ற முடிவு செய்துள்ளேன் என அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியர்களிடம் இம்ரான் கான் சூளுரைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 தொடர்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர்.


மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயராக அந்த அணி மற்ற தொடர்களில் பங்கேற்பதை குறைத்து கொண்டு டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அதில், “உலகக் கோப்பை தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆட்டம் இல்லை.

பாகிஸ்தான் அணியை மாற்றி அமைக்க உள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் முழுதிறமையும் வெளி கொண்டு வர உள்ளோம்“ என்றார்.

Loading...

Also Watch

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...