ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து.

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து.

Pakistan PM #ImranKhan Congratulates #TeamIndia | ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. #AUSvIND

  • News18
  • 3 minute read
  • Last Updated :

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)

முக்கியமான வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், விவிஎஸ்.லக்‌ஷ்மண் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், போட்டி முடிந்து ஒரு நாள் முடிந்த பிறகு, செய்தியை அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்ற, துணைக்கண்டத்தைச் சேர்ந்த அணியான இந்திய கிரிக்கெட் அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள்” என அவர் கூறியுள்ளார்.

அதேபோல், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா நீக்கம்!

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: Imran khan, Ind Vs Aus, India and Pakistan, India vs Australia, Virat Kohli