இது சச்சினா இல்ல இம்ரான் கானா! கன்பியூஸ் ஆன பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர்

சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு, பிரதமர் இம்ரான் கான் 1969-வது வருடத்தில் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது சச்சினா இல்ல இம்ரான் கானா! கன்பியூஸ் ஆன பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர்
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: June 22, 2019, 11:34 PM IST
  • Share this:
சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது புகைப்படத்தை பதிவிட்டு, பிரதமர் இம்ரான் கான் 1969-வது வருடத்தில் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் நயிம் உல் ஹக் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரை, நெட்டீசன்கள் கடுமையாக ட்ரோல் செய்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில், பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது. தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவருடைய சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக், ‘சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு, பிரதமர் இம்ரான் கான் 1969-வது வருடத்தில் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவருடைய பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.


விராட் கோலியின் சிறுவயதைப் படத்தைப் போட்டு, 1976-வது வருடத்தில் இன்சமாம் உல் ஹக் என்றும், லகான் படத்தின் புகைப்படத்தைப் போட்டு ஜோஸ் பட்லர் மற்றும் அஸ்வின் என்றும், ஒரு சிறு குழந்தை கொட்டாவி விடும் படத்தைப் போட்டு, சர்பராஸ் அகமது 1987-ம் வருடத்தில் என்று இஷ்டத்துக்கு பதிவிட்டுள்ளனர்.

Also see:

First published: June 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்