ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இங்கிலாந்து வீரருக்கு ஹேண்ட் ஷேக் செய்ய மறுத்த பாக். பேட்ஸ்மேன் – வைரல் வீடியோ

இங்கிலாந்து வீரருக்கு ஹேண்ட் ஷேக் செய்ய மறுத்த பாக். பேட்ஸ்மேன் – வைரல் வீடியோ

பென் ஸ்டோக்ஸிடம் வாக்குவாதம் செய்யும் முகம்மது அலி.

பென் ஸ்டோக்ஸிடம் வாக்குவாதம் செய்யும் முகம்மது அலி.

வெற்றி இலக்கை நன்றாக நெருங்கி வந்த நிலையில் பாகிஸ்தான் அலி தோல்வியடைந்ததால் அதன் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில், இங்கிலாந்து வீரருக்கு ஹேண்ட் ஷேக் பண்ணாமல் பாகிஸ்தான் வீரர் கடுப்பில் வெளியேறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 9ஆம் தேதி மூல்தான் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களை எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்களை எடுத்தது. இதையடுத்து 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற, சற்று சவாலான இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

‘என்றைக்குமே நீங்கள்தான் சிறந்தவர்’ – மனம் உடைந்துபோன ரொனால்டோவுக்கு விராட் கோலி ஆறுதல்

102.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை : பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவுக்கு அட்வான்டேஜ்…

பாகிஸ்தான் அணியின் கடைசி விக்கெட் முகம்மது அலி களத்தில் இருந்தபோது, கேட்ச் கொடுத்தார். இதில் சந்தேகம் ஏற்படவே, முடிவு டி.ஆர்.எஸ். முறைக்கு சென்றது.

இதற்கிடையே, மேட்ச்சில் வெற்றி பெற்றதாக கூறி இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக் அலியிடம் கை கொடுக்க முற்பட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த முகம்மது அலி, பென் ஸ்டோக்கிடம் ஏதோ பேசினார். இதையடுத்து பென் ஸ்டோக் பின் வாங்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வெற்றி இலக்கை நன்றாக நெருங்கி வந்த நிலையில் பாகிஸ்தான் அலி தோல்வியடைந்ததால் அதன் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

First published:

Tags: Cricket