• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாகிஸ்தானியர்களுக்கு கோலியைப் பிடிக்கும் ரோகித் சர்மாவை ரொம்பப் பிடிக்கும்: ஷோயப் அக்தர்

பாகிஸ்தானியர்களுக்கு கோலியைப் பிடிக்கும் ரோகித் சர்மாவை ரொம்பப் பிடிக்கும்: ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளுவதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் கடும் தாராளம் காட்டுபவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் என்றால் அது மிகையாகாது. தன் பவுலிங்கைப் புரட்டி எடுத்த சச்சின், சேவாக், யுவராஜ் சிங், திராவிட் போன்றவர்களைப் பற்றி புகழாவிட்டாலும் தான் அவ்வளவாக பவுலிங் வீசாத ரோகித் சர்மா, விராட் கோலியை புகழ்ந்து தள்ளுவதில் ஷோயப் அக்தர் வல்லவர்.

  • Share this:
    இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளுவதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் கடும் தாராளம் காட்டுபவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் என்றால் அது மிகையாகாது. தன் பவுலிங்கைப் புரட்டி எடுத்த சச்சின், சேவாக், யுவராஜ் சிங், திராவிட் போன்றவர்களைப் பற்றி புகழாவிட்டாலும் தான் அவ்வளவாக பவுலிங் வீசாத ரோகித் சர்மா, விராட் கோலியை புகழ்ந்து தள்ளுவதில் ஷோயப் அக்தர் வல்லவர்.

    ஜீ தொலைக்காட்சியில் பேசிய ஷோயப் அக்தர், பாகிஸ்தான் மக்கள் விராட் கோலியை நேசிக்கிறார்கள் கோலியை விடவும் ரோகித் சர்மாவை இன்னும் கூடுதலாக நேசிக்கிறார்கள் என்று தெரிவித்தார். “இன்று இந்தியா நல்ல அணியல்ல என்று கூறும் ஒரு பாகிஸ்தானியரைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. இந்திய அணியை வெளிப்படையாகவே பாராட்டுகின்றனர். விராட் கோலியை கிரேட் பிளேயர் என்கின்றனர், ரோகித் சர்மாவை அவரை விடவும் கிரேட் என்றே பேசி வருகின்றனர்.

    ரோகித் சர்மா பேட் செய்வதைப் பார்த்து அவர்தான் ‘இந்தியாவின் இன்சமாம் உல் ஹக்’ என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் ஆடிய ஆட்டத்திற்காக பாகிஸ்தான் மக்கள் ரிஷப் பண்ட்-ஐ அதிகம் நேசிக்கின்றனர், ரசிக்கின்றனர். சூரியகுமார் யாதவ்வை கூட ரசிக்கின்றனர், பாராட்டுகின்றனர். எனவே இந்தியாவை பற்றி பாகிஸ்தானியர்கள் நல்ல கதையாடலையே வைத்துள்ளனர்.

    என் வீடியோக்களைப் பாருங்கள், அதில் துளியளவும் வெறுப்பு இருக்கவே இருக்காது. ஒரு முன்னாள் வீரராக, கிரிக்கெட்டின் தூதனாக, ஒரு மனிதனாக என் கருத்துக்கள் சமபாவனையில் இருக்க வேண்டும். ஆனால் நான் கூறும் கருத்துக்கள் அனைத்தும் பணம் பண்ணுவதற்காகவே என்று சிலர் கருதுகின்றனர். இது உண்மையில்லை, எனக்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தியர்கள் நேசிக்கும் அதிர்ஷ்டக்கார பாகிஸ்தானி நான் தான் என்பதில் பெருமை கொள்கிறேன். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன், அதை காயப்படுத்துவதில் எனக்கு உண்மையில் விருப்பமில்லை. ” என்றார் ஷோயப் அக்தர்.

    துபாயில் வரும் ஞாயிறன்று அதாவது 24ம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் மோதுகின்றன. இந்திய அணி தங்கள் இரு பயிற்சியாட்டங்களிலும் இங்கிலாந்தையும் ஆஸ்திரேலியாவையும் ஊதியுள்ளது. ஆனால் மாறாக பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது, மற்றொரு வார்ம் அப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: