முகப்பு /செய்தி /விளையாட்டு / எளிதான ரன் அவுட்டை தவற விட்ட பவுலர்… கவனம் ஈர்க்கும் டி20 மேட்ச் வீடியோ

எளிதான ரன் அவுட்டை தவற விட்ட பவுலர்… கவனம் ஈர்க்கும் டி20 மேட்ச் வீடியோ

ரன் அவுட்டை  தவறவிடும் பவுலர்

ரன் அவுட்டை தவறவிடும் பவுலர்

முதலில் பேட் செய்த மூல்தான் சுல்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எளிதான ரன் அவுட்டை பவுலர் தஹான் தவற விட்டார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று பாகிஸ்தானில் பி.எஸ்.எல். எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் மூல்தான் சுல்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த மூல்தான் சுல்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடியது. 16 ஆவது ஓவரின்போது அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மூல்தான் அணியின் பந்துவீச்சாளர் தஹான் ஓவர் வீசினார். தலாத் மற்றும் ராஸா ஆகியோர் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தனர். தஹான் வீசிய பந்த ராஸா சிங்கிள் தட்ட முயன்றார். மறுமுனையில் நின்ற தலாத் ரன் எடுக்க ஓடி பாதி பிட்ச்சை கடந்த நிலையில், ராஸா பின் வாங்கினார்.

அப்போது பந்தை கையில் எடுத்து ரன் அவுட் செய்ய தஹான் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மிக எளிதான இந்த ரன் அவுட் வாய்ப்பை தஹான் தவற விட்டார். இதுதொடர்பான வீடியோ க்ளிப் ஒன்று சமூக வலை தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

First published:

Tags: Cricket