• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை இன்னும் அவுட் செய்யாத பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை இன்னும் அவுட் செய்யாத பாகிஸ்தான்

விராட் கோலியின் மிரட்டும் சராசரி

விராட் கோலியின் மிரட்டும் சராசரி

  • Share this:
    டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு பெரிய அச்சுறுத்தல் ஒன்று பும்ரா மற்றொன்று கேப்டன் விராட் கோலி, காரணம் இதுவரை உலகக்கோப்பை டி20 போட்டியில் விராட் கோலியை பாகிஸ்தான் ஒருமுறை கூட அவுட் செய்யவில்லை.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை 2021, போட்டியில் இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது, டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலி செம ரெக்கார்ட் வைத்துள்ளார். விராட் கோலியின் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 சராசரி 84.66 ஆகும். மேலும் விராட் கோலியை டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தான் அணி அவுட் ஆக்கியதில்லை.

    டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி:

    2012 டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் 61 பந்துகளில் 78 ரன்கள் நாட் அவுட்

    2014 டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் - 32 பந்துகளில் 36 நாட் அவுட்.

    2916, டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் - 37 பந்துகளில் 55 ரன்கள்.

    மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் 264 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 84.66. இரண்டு அரைசதங்கள். அவரது ஸ்ட்ரைக் ரேட் 118.6. இந்த முறை ஸ்ட்ரைக் ரேட்டை முன்னேற்றுவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

    இந்த உலகக்கோப்பை டி20 தொடங்குவதற்கு முன்னரே விராட் கோலி இதுதான் கேப்டனாக கடைசி தொடர் என்று அறிவித்து விட்டார். ஐசிசி கோப்பை டைட்டிலுடன் அவர் முடிக்க விரும்புகிறார். பணிச்சுமையை தன் கேப்டன்சி உதறலுக்கு அவர் காரணமாக கூறினாலும் வெளியே இது தொடர்பாக பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

    Also Read: Ind vs Pak: அவங்க என்ன வேணா பேசிட்டுப் போகட்டும்- பாபர் அசாமிடம் கூறிய இம்ரான் கான், ரமீஸ் ராஜா

    கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பேட்டிங்கில் சரிவர ஆடுவதில்லை என்ற விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளன. ஆனாலும் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. உலகின் அனைத்து முக்கிய மைதானங்களிலும் வலுவான எதிரணிகளுக்கு எதிராக ரன்களைக் குவித்துள்ளார் விராட் கோலி, இன்று பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 3ம் நிலையில் இறங்கி சாதிப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடயே எழுந்துள்ளதோடு, பாகிஸ்தான் அணியும் பயப்படும் ஒரே வீரர் விராட் கோலிதான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: