இலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாவின் மிரட்டல்தான் காரணம்! பாக். அமைச்சர் புதுத்தகவல்

இலங்கை அணி - பாகிஸ்தான் அமைச்சர் பவத் சவுத்ரி

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை தவிர்க்காவிட்டால் ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படுவார் என்று இந்தியா மிரட்டி உள்ளது - பாகிஸ்தான் அமைச்சர்

  • Share this:
பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இதற்கும் இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி 27-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாட இருந்தது.

பாகிஸ்தானில் விளையாட பாதுகாப்பான சூழ்நிலை இல்லை எனக் கூறி இலங்கை டி20 கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ் உள்ளிட்ட முக்கிய 10 வீரர்கள் தொடரிலிருந்து விலகி உள்ளனர். இதனால் பாகிஸ்தான் - இலங்கை தொடர் நடக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வர மறுப்பதற்கு இந்தியா தான் காரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கருத்தில், “இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை தவிர்க்காவிட்டால் ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படுவார் என்று இந்தியா மிரட்டி உள்ளது. இதனால் தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுத்துள்ளனர். இதனை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என்னிடம் கூறிஉள்ளனார்.விளையாட்டு முதல் விண்வெளி வரை இந்தியா நாட்டை முன்னிலைப்படுத்துவது கண்டிக்க வேண்டிய ஒன்று. இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் மலிவான செயல்“ என்று பதிவிட்டுள்ளார்.

Published by:Vijay R
First published: