முகப்பு /செய்தி /விளையாட்டு / Asia Cup 2022: பாகிஸ்தான் அணியை நாங்கள் மற்ற எதிரணிகளில் ஒன்றாகவே கருதுகின்றோம் - ரோகித் சர்மா

Asia Cup 2022: பாகிஸ்தான் அணியை நாங்கள் மற்ற எதிரணிகளில் ஒன்றாகவே கருதுகின்றோம் - ரோகித் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து ரோகித் சர்மா.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து ரோகித் சர்மா.

“வெல்ல வேண்டும். இது சந்தேகமே இல்லாமல் ஒரு சவாலான போட்டியாக இருக்கப்போகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்.” - ரோகித் சர்மா

  • Last Updated :
  • Internationa, IndiaDubaiDubaiDubaiDubai

ஆசியக்கோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கிடையே உள்ள அரசியல் காரணங்களால் இரு அணிகளும் சர்வதேச தொடர்களைத் தவிர வேறு எந்த போட்டிகளிலும் விளையாடுவதில்லை.

இதனால் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

பத்து மாதங்களுக்குப் பிறகு இந்த இரு அணிகளும் களத்தில் இறங்கும் இப்போட்டியைக் குறித்து இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் என்பதைத் தாண்டி ஒரு குழுவாக நாம் எப்படி செயல்படப்போகின்றோம் என்பதுதான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

“28ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நாங்கள் முழுமையாக விளையாடவேண்டும். போட்டிக்கான தயாரிப்புகளைப் பொறுத்தவரை எந்த விதத்திலும் குறைவாக இல்லை என்று நினைக்கிறேன். எதிரணி எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதைத் தாண்டி நாங்கள் ஒரு குழுவாக என்ன சாதிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.” என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் “எங்களைப் பொறுத்தவரை இது இன்னொரு எதிரணி அவ்வளவே. நாங்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெல்ல வேண்டும். இது சந்தேகமே இல்லாமல் ஒரு சவாலான போட்டியாக இருக்கப்போகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

top videos

    இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்று மாலை 7:30 மணிக்கு நடைபெருகிறது.

    First published:

    Tags: Asia cup, Asian cup cricket