ராட்டர்டாமில் நடைபெற்ற பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 206 ரன்களுக்குச் சுருட்டிய நெதர்லாந்து கடைசியில் இலக்கை விரட்டி 49.2 ஓவர்களில் 197 ரன்கள் வரை வந்து போராடி தோல்வி அடைந்தனர், இதன் மூலம் பாகிஸ்தான் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் மூலம் கைப்பற்றியது.
நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்று இருந்த நிலையில் நேற்று ராட்டர்டாமில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 91 குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் அந்த அணி 49.4 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 104/2 என்று இருந்த பாகிஸ்தான் அதன் பிறகு 8 விக்கெட்டுகளை அடுத்த 102 ரன்களுக்கு இழந்தது, பாபர் அசாம் மட்டும் இல்லையெனில் படுதோல்வியை சந்தித்திருக்கும் பாகிஸ்தான்.
நெதர்லாந்தின் பாஸ் டீ லீட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற விவியன் கிங்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினா ர்.
இதையடுத்து 207 ரன்கள் வெற்றி இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தவிர டாம் கூப்பர் 62 ரன்கள் விளாசி சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் நெதர்லாந்து அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் 19 வயதே ஆன நசீம் ஷா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது.
சேசிங்கில் பெரும்பாலான நேரங்களில் பாகிஸ்தான் தோல்வியடையும் என்றே தெரிந்தது. குறிப்பாக டாம் கூப்பர், விக்ரம்ஜித் சிங் கூட்டணியான 71 ரன்களின் போது பாகிஸ்தான் விக்கெட்டுகளைத் தேடிக்கொண்டிருந்தது. ஆனால் நசீம் 5 விக்கெட், வாசிம் 4 விக்கெட்டுகள் நெதர்லாந்து கதையை முடித்தது.
இலக்கை விரட்டியது பெரிதல்ல, பாகிஸ்தான் பேட்டிங் லைன் அப்பை 206 ரன்களுக்குக் காலி செய்ததிலிருந்து இந்திய அணி விஷயங்களைக் கற்றால் நல்லது. ஆட்ட நாயகன் நசீம் ஷா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Netherlands, ODI, Pakistan cricket