ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிசிசிஐ ஒரு.... பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

பிசிசிஐ ஒரு.... பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

அஃப்ரிடி

அஃப்ரிடி

ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ அறிவித்த நிலையில் முன்னாள் வீரர் அஃப்ரிடி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 உலகக்கோப்பை 2022 தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுது்தி உள்ள இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே பிசிசிஐ ஆண்டு பொது கூட்டம் முடிந்த பின் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற விளக்கத்தை செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். அதில், இந்திய அணி பாகிஸ்தான் செல்வது அரசின் முடிவு. பொதுவான ஒரு இடத்தில் போட்டி நடந்தால் இந்தியா பங்கேற்கலாம். ஆகையால் ஆசிய கோப்பை 2023 தொடருக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது“ என்று தெரிவித்திருந்தார்.

Also Read : டி20 உலகக்கோப்பை 2022 : முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தமிழர்

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது. இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை 2023 தொடருக்கு பாகிஸ்தான் இந்தியாவிற்கு வராது என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டடது.

இதனிடையே முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி பிசிசிஐ கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த 12 மாதங்களாக இரு தரப்பிலும் சிறந்த தோழமை இருந்து வருகிறது. இந்தசூழலில் பிசிசிஐ செயலாளர் என் ஏப்படி பேசியிருக்கிறார்? அதுவும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பேசியுள்ளது பிசிசிஐ ஒரு திறனற்ற நிர்வகமாக உள்ளதாக பிரதிபலிக்கிறது என்றுள்ளார்.

First published: