ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நடிப்பில் நீங்கள் உலகநாயகன்... விராட் கோலியை ட்ரோல் செய்யும் பாக். ரசிகர்கள்

நடிப்பில் நீங்கள் உலகநாயகன்... விராட் கோலியை ட்ரோல் செய்யும் பாக். ரசிகர்கள்

கோலியை ட்ரோல் செய்த பாக். ரசிகர்கள்

கோலியை ட்ரோல் செய்த பாக். ரசிகர்கள்

Virat Kohli || தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக் கோப்பையின் 8-வது சீசனில் விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு திரில் வெற்றியை பெற்று தந்தார். பின்னர் நெதர்லாந்துக்கு எதிராகவும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக (IND vs SA) அவரால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் போது எய்டன் மார்க்ரமின் ஒரு எளிய கேட்சை கோலி கைவிட்டார். இதையடுத்து அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்க பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் பெற்ற தோல்வியால் டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு குறைவாகவே உள்ளது. அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி முக்கியமானது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடியாக இருந்திருக்கும்.

  இதனால் தென்னாப்பிரிக்காக அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த தொடரில் 2 அரைசதங்கள் விளாசிய விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 12 ரன்னில் அவுட்டானார். மேலும் எய்டன் மார்கம் கொடுத்த எளிதான கேட்சை கோலி கோட்டைவிட்டார். இதனால் எய்டன் மார்கம் அரைசதம் அடித்தது மட்டுமின்றி டேவிட் மில்லருடன் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். தென்னாப்பிரிக்காவின் இது வெற்றிக்கு இது முக்கியமானதாக அமைந்தது.

  இந்த போட்டிக்கு பின் விராட் கோலி இன்று கடினமான நாள், இப்போது கவனம் அடுத்த போட்டியில் இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனை பாகிஸ்தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், நீங்கள் பாகிஸ்தானில் பல ரசிகர்களின் அன்பை பெற்று இருந்தீர்கள். பாபர் மற்றும் ரிஸ்வான் தவிர நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தோம். உங்களை ராஜாவாகக் கருதிய பாகிஸ்தானியர்களின் இதயங்களை உடைத்தீர்கள். உங்கள் நடிப்பு அற்புதம். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றுள்ளார்.

  மற்றொரு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கோலியின் புகைப்படத்தை, சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு தான் என்று தெரவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணி உடன் இந்தியா தோல்வியடைந்துள்ளால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு மங்கி உள்ளது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கிங் கோலி மீது கோபத்தில் இதுப்போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  தற்போதை நிலவரப்படி அனைத்து அணிகளும் 3 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் குரூப் 2 பிரிவின் புள்ளிப்பட்டியல் படி, தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup, Virat Kohli