பாகிஸ்தானிலும் கிங் 'தல' தோனி தான்! வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி

பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தானிலும் கிங் 'தல' தோனி தான்! வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி
MS Dhoni
  • News18
  • Last Updated: May 25, 2019, 6:15 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை பெருமைப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் விநோதமான பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன் அனைத்து அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.


இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.



ஷேசாத் உல் ஹசான் என்ற அந்த ரசிகர் 7-ம் நம்பருடன் தோனியின் பெயரை பாகிஸ்தான் ஜெர்சியில் பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: #INDvNZ Live Score Updates | உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்

Also Read : இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்… பயிற்சியின் போது இளம்வீரர் காயம்…!

Also Read : உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : தென்னாப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை!

Also Watch

First published: May 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading