• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இன்றையப் போட்டியில் இந்தியா தோற்க கோரிக்கைவைத்த பாகிஸ்தான் பெண்: தோனி கூறிய பதில்- வைரல் வீடியோ

இன்றையப் போட்டியில் இந்தியா தோற்க கோரிக்கைவைத்த பாகிஸ்தான் பெண்: தோனி கூறிய பதில்- வைரல் வீடியோ

தோனி

தோனி

பாகிஸ்தானுக்கு எதிரானப் போடடியில் தோல்வியடைய வேண்டும் என்று கே.எல்.ராகுல், தோனியிடம் பாகிஸ்தான் பெண் கோரிக்கைவைதத வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் என்றாலே உலக அளவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருககும். சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதால் எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.

    இந்தப் போட்டிக்கு இந்திய வீர‍ர்கள் கே.எல்.ராகுல், தோனி உள்ளிட்ட வீர‍ர்கள் மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த‍னர். அப்போது வெளியிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த‍ பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகை, கே.எல்.ராகுலைப் பார்தது இந்தப் போட்டியில் நன்றாக விளையாடாதீர்கள். பாகிஸ்தான் வெற்றி பெறட்டும் என்று கோரிக்கை வைத்தார்.


    அதேபோல, தோனியையும் பார்த்து, 'இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறட்டும். விட்டுக்கொடுங்கள்' என்றார். அந்த‍ப் பெண்ணின் கோரிக்கையைக் கேட்டு சிரித்த தோனி, 'அந்தப் பெண்ணிடம் இதுதான் எங்களுககு வேலை என்று பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: