Home /News /sports /

PAKvBAN | டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

PAKvBAN | டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

PAKvBAN

PAKvBAN

ICC World Cup 2019 | Pakistan vs Bangladesh | இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே அந்த அணியின் அரைஇறுதி கனவு நனவாகும்.

  • News18
  • Last Updated :
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அஹமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

உலகக் கோப்பை தொடரின் 43வது லீக் போட்டி லண்டன் லார்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகள்  முடிந்துள்ளன இதில் நான்கில் வெற்றி, மூன்றில் தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 9 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் நெட் ரன் விகிதம் மைனஸ் 0.792.

பாகிஸ்தான் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே அந்த அணியின் அரைஇறுதி கனவு நனவாகும்.

“500 ரன்களுக்கு மேல் குவித்து, வங்கதேசத்தை 50 ரன்களுக்குள் சுருட்ட முயற்சிப்போம்” என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி