ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்ட பாகிஸ்தான் வீரர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்ட பாகிஸ்தான் வீரர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தேசிய கொடியில் ஆட்டோகிராப் போடும் ஷாகின் அப்ரிடி

தேசிய கொடியில் ஆட்டோகிராப் போடும் ஷாகின் அப்ரிடி

இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்டுள்ளதை இருநாட்டு ரசிகர்களும் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international | sydney

  சிட்னியில் இந்தியாவின் தேசிய கொடியில் பாகிஸ்தான் வீரர் ஆட்டோகிராப் ஈடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டியில் இந்தியா , பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. சிட்னியில் தொடங்கியுள்ள முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

  இந்த நிலையில் போட்டிக்கு முன்னர் சிட்னியில் ரசிகர்களுடன் உரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய தேசிய கொடியில் ஆட்டகிராப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  இதையும் படிங்க: அடேய் கேமராமேன்... இதெல்லாம் பாக்க மாட்டீயாடா’ - வீடியோவுக்கு அஷ்வின் போட்ட பதில் ட்வீட்!

  பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினரிடம் எப்போதும் நட்பு பாராட்டி வருவது வழக்கம். கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு சர்வதேச சதத்தை அடிக்காமல் விமர்சனத்திற்குள்ளான விராட் கோலிக்கு இந்திய ரசிகர்கள் எப்படி ஆறுதலாக இருந்தார்களோ அப்படி தான் பாகிஸ்தான் வீரர்கள் இருந்தார்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் விராட் கோலிக்கு ஆறுதல் மற்றும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  சமீபத்தில் 34 வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலிக்கு லெஜண்ட் என குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வந்ததும் அதனை இந்திய ரசிகர்கள் ஷேர் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். அப்படி தான் சாஹின் அப்ரிடி இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்டுள்ளதை இருநாட்டு ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs Pakistan, Pakistan Cricketer, Shaheen Afridi, Sydney, T20 World Cup