ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பாக். முன்னாள் கேப்டன்…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பாக். முன்னாள் கேப்டன்…

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அசார் அலி.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அசார் அலி.

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிப்பது என்பது கொஞ்சம் கடினமான முடிவுதான். ஆனால் நான் ஓய்வு எடுப்பதற்கு இதுதான் சரியான தருணம் – அசார் அலி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான அசார் அலி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஜாவித் மியான்டட், முகம்மது யூசுப், இன்சமாம் உல் ஹக், யூனுஸ் கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் அசார் அல் உள்ளார். 96 இன்னிங்ஸ்களில் 7097 ரன்களை எடுத்துள்ள அசார் அலியின் சராசரி 42.49 ரன்.

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அசார் அலி கூறியதாவது-

நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியதை மிகப்பெரும் கவுரவமாக நான் கருதுகிறேன். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிப்பது என்பது கொஞ்சம் கடினமான முடிவுதான். ஆனால் நான் ஓய்வு எடுப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

‘கேப்டனுக்கான தகுதியே கிடையாது’ – வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனை விளாசும் பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானின் மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடியதை நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இதேபோன்று லெஜண்டரி பயிற்சியாளர்களின் கீழ் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நான் பாகிஸ்தான் அணியை கேப்டனாக சிலமுறை வழி நடத்தியுள்ளேன். இது எனக்கு கிடைத்த கவுரவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி20 போட்டியில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்… மோசமான சாதனை படைத்த கிரிக்கெட் அணி

37 வயதாகும் அசார் அலி 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு  எதிராக லார்ட்ஸ்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அறிமுகம் ஆனார். டெஸ்ட் ஃபார்மேட்டில் 34 அரைச் சதங்களும் 19 சதங்களையும் அசார் அலி அடித்துள்ளார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் அசார் அலி. நாளை நடைபெறவுள்ள போட்டியில் தொடக்க வீரராக அசார் அலி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Pakistan cricket