• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாடம் கற்றுக் கொண்டோம், இனி நாங்களும் வேலையைக் காட்டுவோம் - ரமீஸ் ராஜா காட்டம்

பாடம் கற்றுக் கொண்டோம், இனி நாங்களும் வேலையைக் காட்டுவோம் - ரமீஸ் ராஜா காட்டம்

பாக்.கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா.

பாக்.கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா.

நியூசிலாந்து அணி பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பாகிஸ்தான் தொடரை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து ஓட்டம் பிடிக்க இங்கிலாந்தும் தன் தொடரை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவின் வேதனையை அதிகரித்துள்ளது.

  • Share this:
    நியூசிலாந்து அணி அன்று பாதுகாப்புக் காரணம் காட்டி அனைவரும் நாடு திரும்பினர் தொடர் ரத்தானது, இங்கிலாந்தும் பாதுகாப்பு காரணம் காட்டி வரமறுத்தனர், மேற்கு நாடுகள் இப்படி முன் தீர்மானத்தின் படி முன் தவிர்ப்பில் இறங்கியுள்ளனர், இனி நாங்களும் எங்கள் வேலையைக் காட்டுவோம் என்ற ரீதியில் ரமீஸ் ராஜா காட்டமாக பேசியுள்ளார்.

    என்ன பாதுகாப்பு சிக்கல் என்பதை பாகிஸ்தானுக்கும் தெரிவிக்கவில்லை, வாரியத்துடனும் கலந்தாலோசிக்கவில்லை தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார்கள் நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார் ரமீஸ் ராஜா. வரும் அணிகள் என்ன கேட்கிறார்களோ பாகிஸ்தான் செய்து கொடுக்கிறது அவர்கள் சவுகரியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம், ஆனால் அவர்களின் பதில் மரியாதை இப்படித்தான் இருக்கிறது என்கிறார் ரமீஸ் ராஜா.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது: “இங்கிலாந்து விலகியது எனக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது, ஆனால் இது எதிர்பார்த்ததுதான், இந்த மேற்கு நாடுகள் எப்போதும் இப்படித்தான் ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஒருவரையொருவர் ஆதரிப்பார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி அந்தப் பார்வையில் என்ன முடிவை வேண்டுமானாலும் அவர்கள் எடுக்கமுடியும். கோபம்தான் வருகிறது, முதலில் நியூசிலாந்து என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதை எங்களிடம் பகிராமலேயே வெளியேறி விட்டனர்.

    இப்போது இங்கிலாந்து விலகியுள்ளது, இதெல்லாம் எங்களுக்கு ஒரு பாடம், நாங்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கு வரும் அணிகளுக்கு எங்கள் சக்தியையும் மீறி பாதுகாப்பையும் பிற வசதிகளையும் செய்து தருகிறோம். ஆனால் நம் அணி அங்கு சென்றால் கண்டிப்பான பயோபப்புள் விதிமுறைகள், கண்டிப்பான தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் நாம் பொறுத்தருள வேண்டும். இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனி நாங்களும் எங்கள் வழியில் செல்வோம். எங்கள் நலன்களில்தான் அக்கறை செலுத்துவோம்.

    எங்கள் நலன் என்னவென்றால் இந்த நாட்டில் கிரிக்கெட் தடைபடக்கூடாது என்பதே, கிரிக்கெட் நாடுகளிடையே சகோதரத்துவம் இல்லையெனில் என்ன இருக்கிறது?நியூசிலாந்து, இங்கிலாந்து அடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஏற்கெனவே பாகிஸ்தான் தொடரை மறுபரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இவர்கள் ஒரு அணி. நாம் யாரிடம் புகார் அளிப்பது? நாம் அவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கிறோம் ஆனால் அவர்கள் எங்களை அப்படிப் பார்க்கவில்லை.

    எங்கள் நாட்டு கிரிக்கெட் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தோமானால் காசுக்காக எங்களுடன் ஆட இந்த நாடுகள் அலைவார்கள். பாகிஸ்தான் சூப்பர் லீகில் வந்து ஆடுகின்றனர், ஆனால் நாடு என்று வரும்போது பாகிஸ்தானுக்கு எதிராக வேறு பட்ட மனநிலையில் ஒன்று சேர்கின்றனர்.” என்று சாடித்தள்ளினார்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: