• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தயவு செஞ்சு திரும்பி வராதீங்க உமர் அக்மல்: பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டம்

தயவு செஞ்சு திரும்பி வராதீங்க உமர் அக்மல்: பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டம்

உமர் அக்மல்

உமர் அக்மல்

சொந்தக் காரியம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் அமெரிக்கா செல்வதையடுத்து ரசிகர்கள் அவரை திரும்பவும் வராதீர்கள் தயவு செய்து அங்கேயே இருந்து விடுங்கள் என்று காட்டமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

  • Share this:
    உமர் அக்மல் பாவம் எல்லாம் நன்றாகச் சென்றால் அமெரிக்காவிலேயே சில காலம் கழிக்க வேண்டி வரும் என்னுடைய ஆதரவாளர்கள் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள், எப்போதும் செய்வது போல் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரியுள்ளார். ஆனால் நெட்டிசன்கள், ரசிகர்கள் அவரை புண்படுத்தும் விதமாக இங்கு வராதீங்க அங்கேயே இருந்துடுங்க என்று மெசேஜ் போட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இந்தக் காலம் என்றில்லை எந்தக் காலத்திலும் ஒரு வீரர் சடசடவென சர்வதேசப் புகழை எட்டுவார் பிறகு காணாமல் போய் விடுவார், தஸ்லிம் ஆரிப் என்ற ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் 2 டெஸ்ட்கள்தான் ஆடினார், அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 210 நாட் அவுட், இந்தியாவுக்கு எதிராக 90 ரன்கள் ஆனால் காணாமல் போய் விட்டார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரகா அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் எடுத்த ஒரு வீரரும் காணாமலே போய் விட்டார். முகமது அக்ரம், முகமது வாசிம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் அவ்வளவு சீக்கிரம் உமர் அக்மல் காணாமல் போகவில்லை, மிகவும் பிராமிசிங் வீரராகத்தான் திகழ்ந்தார். ஆனால் இவரும் சர்ச்சைகளுக்குள் சிக்கினார்.

    ஸ்பாட் பிக்சிங் அணுகலை ஒழுங்காக ஊழல் எதிர்ப்புக் கமிட்டியிடம் ரிப்போர்ட் செய்யவில்லை என்று 12 மாதங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் தடை செய்யப்பட்டார். உமர் அக்மலே இது தொடர்பாகக் கூறும்போது, “17 மாதங்களுக்கு முன்பாக நான் தவறு செய்தேன். அது என் கிரிக்கெட் வாழ்க்கையையே கபளீகரம் செய்தது. அந்தச் செயலினால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரிய அவப்பெயர் ஏற்பட்டது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்றார்.



    நல்ல பிளேயர் நன்றாக ஆடக்கூடியவரின் விதி, ஒரு சிறிய தவறு கரியரே காலியாகி விட்டது, ஆனால் அவர் கிரிக்கெட் ஆட்டத்தை மதிக்க வேண்டும், ஆனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை மன்னிப்பதாக இல்லை, நாட்டை விட்டே போயிடுங்க பிளீஸ் திரும்பி வராதீங்க என்று கூறுவது ஒரு கிரிக்கெட் வீரனுக்கு எத்தனை பெரிய அவமானம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: