ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியே 2 பேட்ஸ்மேன்களை நம்பித்தான் உள்ளது… முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியே 2 பேட்ஸ்மேன்களை நம்பித்தான் உள்ளது… முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

பாபர் ஆசம் - முகம்மது ரிஸ்வான்

பாபர் ஆசம் - முகம்மது ரிஸ்வான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடும் ஆட்டம் வரும் 23-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாகிஸ்தான் அணியே 2 பேட்ஸ்மேன்களை நம்பித்தான் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

  டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அனைத்து சர்வதேச அணிகளும் கோப்பையை வெல்வதற்கு முனைப்பு காட்டி வருகின்றன.

  இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.

  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடும் ஆட்டம் வரும் 23-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான முந்தைய போட்டிகளை ஒப்பிடும்போது, இந்திய அணியே அதிக பலம் கொண்டதாக கருதப்படுகிறது.

  இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது-

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை விட தாங்கள் பல்வேறு பிரிவில் முன்னணியில் இருக்கிறோம் என்பதை மீண்டும் உறுதி செய்தது. இந்திய அணியை பொறுத்தவரைக்கும் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே நம்பி ஒட்டுமொத்த அணியும் கிடையாது.

  ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. அந்த அணியின் தொடக்க வீரர்களான பாபர் ஆசம், முகம்மது ரிஸ்வான் ஆகியோரை நம்பித்தான் ஒட்டுமொத்த அணியும் உள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தங்களது திறமையை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்துகிறார்கள். எந்த வீரர்கள் அணியில் இல்லாவிட்டாலும், ஒட்டுமொத்த அளவில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். இதுதான் இந்திய அணியின் பலம். இவ்வாறு அவர் கூறினார்.

  சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 - 2என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இறுதியாக கடைசி இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 4 - 3 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket