ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நடப்பாண்டில் 1000 ரன்களை கடந்த பாகிஸ்தான் கேப்டன்… டெஸ்ட் போட்டிகளில் சாதனை

நடப்பாண்டில் 1000 ரன்களை கடந்த பாகிஸ்தான் கேப்டன்… டெஸ்ட் போட்டிகளில் சாதனை

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

ஒருபக்கம் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடினாலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்திக்க உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பாண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இதன்பின்னர் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 3ஆவது டெஸ்ட் நடந்து வருகிறது.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக். வீழ்த்திய இளம் வீரர்… இங்கிலாந்தின் ரெஹான் அகமது சாதனை

கராச்சியில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 45 ரன்களை எடுத்தபோது பாபர் ஆசம் நடப்பாண்டில் 1000 ரன்களை கடந்தார். இந்த இன்னிங்ஸில் ஆசம் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நடப்பாண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் அவர் 1,009 ரன்களை எடுத்திருக்கிறார். இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்… வெற்றியை நெருங்கிய இங்கிலாந்து அணி…

அந்த வகையில் இந்தாண்டில் பாபர் ஆசம் ரன் எடுப்பதற்கு கூடுதலாகஒரு டெஸ்ட் போட்டி கிடைக்கும். 2022-ல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார்.

இவர் 15 டெஸ்ட்களில் விளையாடி 1,098 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 10 டெஸ்டில் 1,079 ரன்களும், அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டா 10 டெஸ்ட்களில் 1,061 ரன்கள் எடுத்திருக்கிறார்.

பாகிஸ்தானின் யூனுஸ் கான் 2 முறை ஒரேயாண்டில் 1000 ரன்களை 2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கடந்துள்ளார். ஒருபக்கம் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடினாலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்திக்க உள்ளது.

ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி தொடரை இழந்த நிலையில், 3ஆவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் நாளை நடைபெறும் 4ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket, Pakistan cricket