• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கிரிக்கெட் மீது எங்களுக்கு இருக்கும் கரிசனம் மற்ற கிரிக்கெட் நாடுகளுக்கு இல்லை: பாபர் அசாம்

கிரிக்கெட் மீது எங்களுக்கு இருக்கும் கரிசனம் மற்ற கிரிக்கெட் நாடுகளுக்கு இல்லை: பாபர் அசாம்

பாபர் அசாம்.

பாபர் அசாம்.

கிரிக்கெட் நலன்களைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் எப்போதும் செயல்படுவதாகவும் மற்ற கிரிக்கெட் நாடுகள் அவ்வாறு இல்லை என்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முட்டுகளுக்கு மற்ற நாட்டு வாரியங்களும் துணைபோகின்றன, சர்வதேச தொடர்களை ரத்து செய்கின்றன, இந்தியாவே ஐபிஎல் தொடருக்காக இங்கிலாந்தில் 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது. நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்தது. இப்போது இங்கிலாந்தும் அதே காரணங்களுக்காக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்கிறது.

    கோவிட் உச்சத்தில் இருந்த போது வாக்சின்கள் இல்லாத காலத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சென்று ஆடியது. மே.இ.தீவுகளும் ஆடியது, ஆனால் இங்கிலாந்து அந்த நன்றியைப் பாகிஸ்தான் மீது காட்டவில்லை தொடரை ரத்து செய்கிறது, இதனால் பயனடைந்தது யார் ஐபிஎல் அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 10 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் நியூசிலாந்து வீரர்கள், அனைத்திற்கும் மேலாக இந்தியன் பிரீமியர் லீகின் லாபம்.

    இந்நிலையில் ரமீஸ் ராஜாவைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமும் தன் பங்குக்கு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்: “மீண்டும் ஏமாற்றம். கிரிக்கெட் ஆட்டத்தின் நலன்களை காப்பாற்ற நாங்கள் செயல்படுகிறோம், ஆனால் மற்ற கிரிக்கெட் நாடுகள் எங்கள் அளவுக்கு கரிசனம் காட்டுவதில்லை. கிரிக்கெட்டில் பல இடையூறுகளைக் கடந்து நீண்ட தொலைவு கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் வெறுமனே தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்ல மீண்டு வரவும் செய்வோம்” என்று பாபர் அசாம் ட்விட்ட் செய்துள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இரண்டு தொடர்கள் கேன்சல் ஆனதால் ஏகப்பட்ட நஷ்டம். நியூசிலாந்து அணி முக்கிய வீரர்களை பணமழை ஐபிஎல் தொடருக்கு அனுமதியளித்து ஆசீர்வாதத்துடன் அனுப்பி பாகிஸ்தானுக்கு 2ம் தர அணியை அனுப்பியது. அதுவும் கேன்சல் ஆகிவிட்டது, இங்கிலாந்து அணியின் 10 வீரர்களில் 9 வீரர்கள் லீக் ஸ்டேஜ் வரை ஆடுகின்றனர்.

    ஒரு வாரியத்தின் தனியார் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒரு நாட்டு வாரியத்துக்குக் கொடுக்கப்படாமல் இருப்பதும், பாகிஸ்தான் கிரிக்கெட்டை முன் தீர்ப்புடன் அணுகுவதும் ஐசிசி மற்றும் டாப் போர்டுகளான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களின் அசாத்திய ஆதிக்கத்தை ஊக்குவிப்பதுமாக கிரிக்கெட் சென்று கொண்டிருக்கிறது என்று பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: