• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அறிவுள்ள நாடுகள் இந்தியாவை பின்பற்றாதீர்கள்: ஷாகித் அப்ரீடி சர்ச்சைப் பேச்சு

அறிவுள்ள நாடுகள் இந்தியாவை பின்பற்றாதீர்கள்: ஷாகித் அப்ரீடி சர்ச்சைப் பேச்சு

ஷாகித் அப்ரீடி.

ஷாகித் அப்ரீடி.

நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் பாதுகாப்புக் காரணங்களை காட்டி நாடு திரும்பிய விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை, ஐசிசியும் ஒன்றும் செய்ய முடியாத இந்த ஒரு போக்கு குறித்து பாகிஸ்தான் முன்னாள், இந்நாள் வீரர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

  • Share this:
    நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் பாதுகாப்புக் காரணங்களை காட்டி நாடு திரும்பிய விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை, ஐசிசியும் ஒன்றும் செய்ய முடியாத இந்த ஒரு போக்கு குறித்து பாகிஸ்தான் முன்னாள், இந்நாள் வீரர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, ‘இதே பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று தொடரிலிருந்து விலகுவார்களா, மாட்டார்கள் எல்லம் பணம் தான்’ என்று கடுமையாகச் சாடினார். இங்கிலாந்தும் இதனைத் தொடர்ந்து ரத்து செய்ய வரிசையாக சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிளைத் தள்ளி விட்டால் வரிசையாக அனைத்து சைக்கிள்களும் விழுமே அதுபோல் ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் என்று பாகிஸ்தான் தொடரை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி விட்டன.

    இந்நிலையில் பாகிஸ்தான் அதிரடி ஆல் ரவுண்டர் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரீடி கூறும்போது, “பயண ஏற்பாடுகள் என்றால் துருவித் துருவி ஆராய்வார்கள் என்பதை அறிவோம். பயணம் செய்யும் அணியின் நாடு பாதுகாப்பு உத்தரவாதங்களை சரிபார்க்கும். பாதைகள் என்ன, பயணங்கள் என்னென்ன போன்றவையெல்லாம் சரிபார்க்கப்பட்டு உத்தரவாதமாக இருந்தால் மட்டுமே அணிகள் பயணம் மேற்கொள்ள பச்சைக் கொடி காட்டப்படும்.

    பாகிஸ்தானில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை நேசிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் செய்த காரியம் மன்னிக்க முடியாதது. அச்சுறுத்தல் இருந்தால் அதை அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பகிர்ந்திருக்க வெண்டும். பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சூழ்நிலையை மதிப்பீடு செய்ய அனுமதித்து பிறகு முடிவெடுத்திருக்க வேண்டும்.

    இதைப்பற்றிய பின்னணியை நாம் ஆராய்ந்து நாமும் தீர்மானம் எடுக்க வேண்டும். நாங்களும் நாடுதான் எங்களுக்கும் கவுரவம், பெருமை எல்லாம் உண்டு என்பதை உணர்த்தும் தீர்மானமாக அது இருக்க வேண்டும். ஒரு நாடு இருந்தால் பரவாயில்லை. மற்ற நாடுகளும் இதே தவறைச் செய்யக்கூடாது. மற்ற நாடுகள் கல்வியறிவு உள்ள நாடுகள் இந்தியாவைப் பின்பற்றக் கூடாது.

    மாறாக கிரிக்கெட் என்பது உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவில் சூழ்நிலை மோசமாக உள்ளது. எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால் எங்கள் வாரியம் இந்தியா செல்ல வலியுறுத்தியது, நாங்களும் சென்றோம். அதே போல்தான் இங்கிலாந்துக்கு கோவிட்-19 சூழ்நிலையிலும் சென்றோம். பொய்யான மின்னஞ்சல்களைக் கண்டு அஞ்சி தொடரை ரத்து செய்தால் அது அவர்களை வெற்றி பெறச் செய்வதற்குச் சமம். இது சரியான வழியல்ல” என்கிறார் அப்ரீடி.

    அதாவது நியூசிலாந்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த செய்தி சிங்கப்பூர் லொகேஷனைப் பயன்படுத்தி விபிஎன் மூலம் இந்தியாவிலிருந்து வந்ததுதான் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்ததையடுத்து ஷாகித் அப்ரீடி இவ்வாறு கூறியுள்ளார். இதனையடுத்தே அறிவுள்ள நாடுகள் இந்தியாவைப் பின்பற்றக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: