• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒழித்து விட முடியும்: ரமீஸ் ராஜா பீதி

இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒழித்து விட முடியும்: ரமீஸ் ராஜா பீதி

பாக்.கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா.

பாக்.கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா.

இந்திய சந்தைகளிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) கிடைக்கும் வருவாயை வைத்துப் பார்க்கும் போது இந்திய அரசு நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைத் தகர்க்க முடியும்.

  • Share this:
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 50% நிதி ஐசிசியிடமிருந்துதான் வருகிறது. ஐசிசிக்கு 90% வருவாய் இந்திய சந்தைகளிலிருந்து வருகிறது. ஒருவிதத்தில் இந்திய வர்த்தகங்கள்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் ஆதரவாக இருக்கிறது என்று கூறலாம். இந்திய பிரதமர் இதை நிறுத்த நினைத்தாரேயானால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகர்ந்து விடும் என்கிறார் ரமீஸ் ராஜா.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறும்போது, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 50% நிதி ஐசிசியிடமிருந்து வருகிறது, ஐசிசிக்கு அதன் 90% வருமான இந்திய சந்தைகளிடமிருந்து இந்திய வர்த்தகங்களிடமிருந்து வருகிறது. இந்தியா ஐசிசிக்கான நிதியை நிறுத்தி விட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே வீழ்ந்து விடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து ஐசிசிக்கு ஒரு வருமானமும் செல்லவில்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டை வலுவாக்க வேண்டும் என்பதே என்னுடைய உறுதியான திட்டம்.

    ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம் கூறினார், உலகக்கோப்பை டி20-யில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிளாங்க் செக் ரெடி என்றார். எங்கள் கிரிக்கெட் பொருளாதாரம் வலுவாக இருந்தால் மற்ற வாரியங்கள் எங்களை யூஸ் அண்ட் த்ரோ போல் செய்ய முடியாது. சிறந்த கிரிக்கெட் அணியும் சிறந்த கிரிக்கெட் பொருளாதாரமும் மிகப்பெரிய சவால்.” இவ்வாறு கூறினார் ரமீஸ் ராஜா.

    Also Read: தோனியிடமிருந்து ஏன் பெரிய ரன்களை எதிர்பார்க்க முடியாது?- ஓர் அலசல்

    வரும் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா அணிகள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மோதுவதால் இரு நாட்டு ரசிகர்களும் இந்தப் போட்டிக்காக காத்திருக்கின்றனர். இந்திய அணி 2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு 2014-ல் இறுதிக்கு வந்தது.. இந்த முறை இந்தியா வெல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: