• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ராணுவ தொப்பி அணிந்த விவகாரம்: இந்திய அணிக்கு தடை விதிக்க பாக். போர்க்கொடி!

ராணுவ தொப்பி அணிந்த விவகாரம்: இந்திய அணிக்கு தடை விதிக்க பாக். போர்க்கொடி!

ராணுவ தொப்பி அணிந்த இந்திய வீரர்கள். (Image: AP)

ராணுவ தொப்பி அணிந்த இந்திய வீரர்கள். (Image: AP)

#PakistanCricketBoard Asks #ICC To Take Action Against #BCCI For Wearing #ArmyCaps | புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ராஞ்சியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். அத்துடன், இந்திய வீரர்கள் ராஞ்சிப் போட்டிக்கான ஊதியத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.



    பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைச்சர்கள், ராணுவ வீரர்களின் தொப்பியை அணிந்து விளையாடிய இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளது.

    indian team, indian team, இந்திய அணி
    இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)


    இதுகுறித்து பேசிய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி, “கிரிக்கெட் மற்றும் எந்தவொரு விளையாட்டையும் அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. இந்தியா மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என கூறியுள்ளார்.

    ICC, PCB, BCCI
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி (ICC Twitter)


    முன்னதாக, 2014-ல் பாலஸ்தீன தாக்குதலைக் கண்டித்து கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய இங்கிலாந்து வீரர் மொயின் அலி, பாகிஸ்தான் மதபோதகருக்கு ஆதரவாக ஆடை அணிந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது என்பதையும் இசான் மனி குறிப்பிட்டுள்ளார்.

    அனைவருக்கும் தோனியின் அருமை இப்போது புரியும் - முகமது கைஃப்

    VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: