''ரத்தம், நாடி, நரம்பெல்லாம் கிரிக்கெட் வெறி ஊறுன ஒருத்தரால தான் இது முடியும்...'' ஐசிசி வெளியிட்ட புகைப்படம்

''ரத்தம், நாடி, நரம்பெல்லாம் கிரிக்கெட் வெறி ஊறுன ஒருத்தரால தான் இது முடியும்...'' ஐசிசி வெளியிட்ட புகைப்படம்
  • Share this:
ஐசிசி வெளியிட்டுள்ள தீவிர கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ரத்தம், நாடி, நரம்பெல்லாம் கிரிக்கெட் வெறி ஊறுன ஒருத்தரல தான் இது செய்ய முடியும் என்று சொல்வது போல் உள்ளது.

அமெரிக்காவில் வசித்து வருபவர் பாகிஸ்தானை சேர்ந்த ஹசன் தஸ்லீம். பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒன்றைக் கூட தவற விடாமல் பார்த்து விடுவார். இவருக்கு கடந்த 5ம் தேதி திருமணம், அன்று தான் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையோன 2வது டி20 போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை தவறவிடக் கூடாது என்பதற்காக இவர் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில் 2வது டி20 போட்டி கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த போட்டியை தவற விடாமல் பாகிஸ்தான் ரசிகர் ஹசன் தஸ்லீம் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்து கொண்டே திருமண சடங்குகளில் பங்கேற்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த பதிவில் “தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். எப்போதும் மேட்ச் பார்ப்பதை தவறவிட்டத்தில்லை. பாகிஸ்தான் அணி எந்த நேரத்தில் விளையாடினாலும் அந்த போட்டியை பார்த்த பின் தூங்குவேன்“ என்று பதிவிட்டுள்ளார்.பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகரான இவரின் பதிவு இணையத்தில் வைரலானது. இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்