"ஹேய் கருப்பு சிறுவனே..." நிறவெறி சர்ச்சையில் சிக்கிய பாக். கேப்டன் சர்பராஸ்!

Pakistan captain Sarfraz Ahmed making a 'racist' comment | சர்பராஸ் அஹமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது. #SAvPAK

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமது. (ICC)
  • News18
  • Last Updated: January 23, 2019, 1:29 PM IST
  • Share this:
பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமது, தென்னாப்ரிக்க வீரரைப் பார்த்து நிறவெறியைத் தூண்டும் விதமாக பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து, நடந்த 5 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்னாப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. டர்பனில் நேற்று (ஜன.22) நடந்த 2-வது போட்டியில் தென்னாப்ரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகள் மற்றும் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 37-வது ஓவரில் பெலுக்வாயோ பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அஹமது ஏதோ பேசினார்.

Andile Phehlukwayo,
பெலுக்வாயோவை திட்டிய சர்பராஸ் அஹமது. (CricketSA)


வர்ணனையில் இருந்த ரமீஸ் ராஜாவிடம் கேட்ட போது, “பெரிய வாக்கியமாக இருக்கிறது, மொழிபெயர்ப்பது கடினம்” என்று கூறி மழுப்பிவிட்டார்.

Andile Phehlukwayo, பெலுக்வாயோ
தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோ. (CricketSA)


ஆனால், சர்பராஸ் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது. “ஹேய் கருப்புப் பயலே, இன்று உன் அம்மா எங்கு உட்கார்ந்திருக்கிறாள்?, உனக்காக என்ன வேண்டிக்கொள்ள அவரிடம் கூறினாய்?” என்று அவர் பேசியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒழுங்கு விதிமுறையின்படி, நிறவெறியைத் தூண்டும் விதமாக பேசுவது கடும் குற்றமாகும். இதனால், சர்பராஸ் கடுமையான சிக்கலில் மாட்டியுள்ளார்.

Also Watch...

First published: January 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்