Home /News /sports /

80 பந்துகளில் 135 விளாசல், பிறகு 5 விக்கெட்டுகள்- வரலாறு படைத்த பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம்

80 பந்துகளில் 135 விளாசல், பிறகு 5 விக்கெட்டுகள்- வரலாறு படைத்த பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம்

வரலாறு படைத்த பாகிஸ்தான் யு-19 கேப்டன் காசிம் அக்ரம்.

வரலாறு படைத்த பாகிஸ்தான் யு-19 கேப்டன் காசிம் அக்ரம்.

அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் 5ம் இடத்துக்கான ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்தார், பின்னர் 5/37 என்று பந்து வீச்சிலும் அசத்தி, யு-19 உலகக்கோப்பையில் ஒரே மேட்சில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

இரண்டு முறை சாம்பியனான பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது, ஆனால் இருஅணிகளுக்குமே , கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளும் கடந்த வாரம் காலிறுதிச் சுற்றில் முடிவடைந்தது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான முஹம்மது ஷெசாத் மற்றும் ஹசிபுல்லா கான் ஆகியோர் இலங்கையை ஆதிக்கம் செலுத்தியது.

தொடக்க ஜோடி 100 ரன்கள் கூட்டணி அமைத்தது. ஷெசாத் 69 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ரவீன் டிசில்வாவிடம் ஆட்டமிழந்தார். ஹசிபுல்லா கானுடன், கேப்டன் காசிம் அக்ரம் இணைந்தார். இருவரும் இலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். ஹசீபுல்லா கான் 151 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 136 ரன்கள் எடுக்க, கேப்டன் காசிம் கான் 13 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 80 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். இருவரும் சேர்ந்து 229 ரன்களை 25 ஓவர்களில் விளாசினர். பாகிஸ்தான் அண்டர் 19 அணி 365 ரன்கள் குவித்து வெறும் 3 விக்கெட்டுகளையே இழந்தது.

இலங்கை சேசிங் பாகிஸ்தான் கேப்டன் காசிம் கானின் இரண்டு ஓவர்களில் கிழிந்து தொங்கியது. திறமையான ஆல்ரவுண்டர் காசிம் அக்ரம் தொடக்க வீரர்களான சமிந்து விக்ரமசிங்க மற்றும் பவன் பதிராஜா ஆகியோரை வெளியேற்றினார், ஷெவோன் டேனியலும் விழுந்தார். ரனுதா சோமரத்னாவும் ஆட்டமிழந்தார். அக்ரம் இலங்கையை 15/4 ஆகக் குறைத்தார்.

அப்போதிருந்து, இலங்கை அணியின் மானத்தைக் காப்பாற்ற பேட்டிங் செய்தது. அவர்களின் அணித்தலைவர் துனித் வெல்லலகே 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 40 ரன்களைப்போராடிப் பெற்றார். வினுஜா ரான்புல் ஆட்டமிழக்காமல் 53 ரன்களை விளாசினார், இதில் 5 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.

ஆனால் அந்த இருவரின் இன்னிங்ஸ்கள் போதவில்லை. ஜீஷான் ஜமீரின் ஃபுல் டெலிவரியில் ட்ரெவின் மேத்யூ பேடில் வாங்கி வெளியேற 35 ஓவர்களுக்குள் இலங்கை அணியை அவுட்டாக்கி 5வது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published by:Muthukumar
First published:

Tags: Pakistan cricket, Pakistan Cricketer

அடுத்த செய்தி