Home /News /sports /

அவரா? வேண்டவே வேண்டாம் - பாபர் அசாம் மறுக்கும் மூத்த வீரர்

அவரா? வேண்டவே வேண்டாம் - பாபர் அசாம் மறுக்கும் மூத்த வீரர்

பாபர் அசாம்

பாபர் அசாம்

கடந்த டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டியது, ஆனால் இந்தியாவை நோ-லாசில் வீழ்த்தியவுடனேயே திருப்தி அடைந்து விட்டனர், அதனால் போதிய அவா அவர்களிடம் கோப்பையை வெல்வதில் இல்லை, இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பைக்கு மூத்த வீரர்கள் இருவர் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குகிறார் கேப்டன் பாபர் அசாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடந்த டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டியது, ஆனால் இந்தியாவை நோ-லாசில் வீழ்த்தியவுடனேயே திருப்தி அடைந்து விட்டனர், அதனால் போதிய அவா அவர்களிடம் கோப்பையை வெல்வதில் இல்லை, இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பைக்கு மூத்த வீரர்கள் இருவர் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குகிறார் கேப்டன் பாபர் அசாம்.

    பாபர் அசாம், வேண்டவே வேண்டாம் என்று கூறும் ஒரு மூத்த வீரர் சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், இவர் 124 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார், இன்னும் கூட நன்றாகவே ஆடுகிறார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக்கோப்பையில் 40 வயது ஷோயப் மாலிக்கின் பங்களிப்பு மிக மிக முக்கியமாக இருக்கும் என்று நம் மீடியாக்கள் எப்படி தோனிக்கு புகழாரம் சூட்டுவதையே வேலையாக வைத்திருந்தது போல் அங்கு ஷோயப் மாலிக் வேண்டும் என்று கூறி வருகின்றன.

    ஆனால் பாபர் அசாம், ஷோயப் மாலிக்கோ, முகமது ஹபீஸோ தேவையில்லை, அணிக்குத் தேவை இளம் ரத்தம் என்கிறார்.

    “நெதர்லாந்துக்குப் பிறகு உடனேயே போட்டிகள் உள்ளன. எனவே மாற்றங்களுக்கு நேரமில்லை. மூத்த வீரர்கள் அணியை விட்டு போய்விட்டார்கள், இளம் வீரர்களே அவர்கள் இடத்தை நிரப்ப வேண்டும். ஹபீஸ், ஷோயப் மாலிக் பெரிய வீரர்கள்.

    அவர்களை இழந்துள்ளோம் என்பது உண்மைதான், ஆனால் அவர்களது பெரிய இடத்தை ஆசிப் அலி, குஷ்தில் ஷா, இப்திகார் அகமது ஆகியோர் நிரப்ப வேண்டும். இவர்களுக்கு நிறைய போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும், இந்த வீரர்கள்ள் நன்றாக ஆடியுள்ளனர்” என்றார்.

    பாகிஸ்தான் அணி நெதர்லாந்து தொடரை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ஆசியக் கோப்பையில் முதல் போட்டியிலேயே இந்திய அணியை எதிர்கொள்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, India vs Pakistan, T20 World Cup

    அடுத்த செய்தி