#WorldCup2019 - இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: மொயீன் கானின் கனவு பலிக்குமா?

Pakistan can end India jinx at #WorldCup2019: #MoinKhan | இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 16-ம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. #INDvPAK

#WorldCup2019 - இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: மொயீன் கானின் கனவு பலிக்குமா?
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)
  • News18
  • Last Updated: February 13, 2019, 7:17 PM IST
  • Share this:
2019 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் மொயீன் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ICC Cricket World Cup 2019, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 2019
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை. (ICC)



நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 16-ம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில், 1992-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது கிடையாது.

BCCI, PCB, ICC, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)


ஆனால், இந்த முறை இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் மொயீன் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தும் வலிமை வல்லமை தற்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. ஏனென்றால், சர்பராஸ் அகமது தலைமையிலான அணியில் திறமையுள்ள வீரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து காலநிலை எங்களுக்கு சாதகமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
Moin Khan, மொயீன் கான்
பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயீன் கான். (AFP)


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வீழ்த்த முடியாவிட்டாலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்