பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி
PAKvsSL
  • Share this:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒரு நாள்  போட்டி கராச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஜ் அஹமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் பாபர் அஷாம் அதிகபட்சமாக 115 ரன்கள் விளாசினார்.


Also Watch : கராச்சி மைதானம் சென்ற இலங்கை அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் அந்த அணி தடுமாறியது. நடுவரிசை பேட்ஸ்மேன் சினேகன் ஜெயசூர்யா மட்டும் நிலைநின்று ஆடி 96 ரன்கள் குவித்தார்.

இறுதியாக இலங்கை அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல்  ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

Loading...

Also Watch : 5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை

First published: October 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...