ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சொதப்பி வரும் பாபர் அசாம் : நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்!

சொதப்பி வரும் பாபர் அசாம் : நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. டி20 உலககோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • internatio, IndiaPerthPerthPerthPerthPerth

  நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  8வது டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் இந்த போட்டி அந்த அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தது. 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 91 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாதப் கான் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

  இதையும் படிங்க: இறுதி ஓவரின் கடைசி பந்தில் வங்கதேச அணிக்கு காந்திருந்த பெரிய டிவிஸ்ட்: கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு ஜிம்பாப்வே தோல்வி!

  92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். எளிதான் இலக்கு என்பதால் நிதனாமாக விளையாடிய ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. டி20 உலககோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Netherlands, Pakistan cricket, T20 World Cup