சேஸிங்கில் அதிக ரன் குவிப்பு: பாக் வீரர் ஃபக்கர் ஜமான் உலக சாதனை!

சேஸிங்கில் அதிக ரன் குவிப்பு: பாக் வீரர் ஃபக்கர் ஜமான் உலக சாதனை!

பாக் வீரர் ஃபக்கர் ஜமான்

ஒரு நாள் போட்டிகளில் சேஸிங்கில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான்.

  • Share this:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சேஸிங்கில் தனி நபர் அதிகபட்ச ரன் குவிப்பு செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் ஃபக்கர் ஜமான். தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, அந்நாட்டுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், கேப்டன் பவுமா, டுசன், டேவிட் மில்லர் ஆகியோர் அரை அடித்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை குவித்தது தென் ஆப்பிரிக்க அணி.

இதனையடுத்து 342 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபக்கர் ஜமான் ஒற்றை ஆளாக போராடிக் கொண்டிருந்தார். அவர் 155 பந்துகளில் 193 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் சேஸிங்கின் போது அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை ஃபக்கர் ஜமான் படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் 185 ரன்கள் குவித்திருந்ததே சேஸிங்கில் அதிகபட்ச ரன் குவிப்பாக இருந்தது. அந்த சாதனை தற்போது ஃபக்கர் ஜமான் தகர்த்துள்ளார்.

ஃபக்கர் ஜமான் 10 சிக்ஸர்களையும், 18 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். இதில் இடக் கை சுழற்பந்து வீச்சாளர் Tabraiz Shamsi-யின் ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை தூக்கினார். கடைசி ஓவரில் துரதிர்ஷ்டவசமாக ஆர் ரன் அவுட் ஆனார். இதன் மூலம் 7 ரன்களில் அவர் இரட்டை சதம் அடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டார்.

இருப்பினும் ஃபக்கர் ஜமானின் ஆட்டம் பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கவில்லை. பாகிஸ்தான் அணி 17 ரன்களில் தோல்வியை தழுவியது.

தென் ஆப்பிரிக்க அணியுடனான 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி வரும் ஏப்ரல் 7ம் தேதி செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Published by:Arun
First published: