உலகக்கோப்பையில் இந்தியாவை சமாளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்காக, முதன் முதலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி விபரம்:
சர்ஃபராஸ் அகமது (கேப்டன்), அபித் அலி, பாபர் அசாம், பஹீம் அஸ்ரஃப், பஹர் ஸமான், ஹரிஸ் சோகைல், ஹசன் அலி, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், ஜுனைத் கான், முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன் சதாப் கான், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, சோயிப் மாலிக்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சேர்க்கப்படவில்லை.
உலகக்கோப்பை போட்டி என்றாலே இந்தியா - பாகிஸ்தான் மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்திய அணியை எல்லா விதத்திலும் சமாளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரித்வி ஷாவுக்கு ஸ்பெஷல் டின்னர் கொடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்!
சி.எஸ்.கேவை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை... அம்பயரின் முடிவால் ரசிகர்கள் கோபம்!
தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!
தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!
ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி
ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?
ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!
ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!
தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.