Home /News /sports /

பேட்டை ஓங்கிய பாக். வீரர்... மைதானத்தில் சரமாரியாக தாக்கி கொண்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

பேட்டை ஓங்கிய பாக். வீரர்... மைதானத்தில் சரமாரியாக தாக்கி கொண்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

மைதானத்தில் சண்டை

மைதானத்தில் சண்டை

முதலில் ஃபரீத் அஹ்மத்தான் ஆசிப் அலி முகத்திற்கு அருகே போய் மோசமாக நடந்து கொண்டார். அவரின் முகத்திற்கு முன் கையை நீட்டி திமிராக கொண்டாடினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaUAEUAEUAEUAE
    ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் அப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய அப்கானிஸ்தான் 129 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயத்தது. இலக்கு எளிமையாக காணப்பட்டாலும், அப்கான் வீரர்களின் பந்துவீச்சால் பாகிஸ்தான் அடுத்ததுத்து விக்கெட்டுகளை இழந்ததாலும், ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்று பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இப்திகார் அகமது, ஷதாப் கானின் ஆட்டத்தாலும், நசீம் ஷா இறுதியில் காட்டிய அதிரடியாலும், பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இந்த போட்டியின் முடிவில் ஏற்பட்ட சில காட்சிகள் தான் கிரிகெட் உலகின் பேசு பொருளாக்கியுள்ளது.

    Also read : இந்திய அணியை கேலி செய்த இலங்கை பத்திரிகையாளர்

    ஃபரீத் அஹ்மத் வீசிய 19 ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்ஸருக்கு அடித்து பவுலரை முறைத்து பார்த்தார் ஆசிப் அலி. பதிலுக்கு ஃபரீத் அஹ்மதும் ஆசிப் அலியை முறைத்து பார்த்தார். இந்த நிலையில், அடுத்த பந்திலேயே ஆசிப் அலி, ஃபரீத் அஹ்மதிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.

    இந்த விக்கெட் போனதும் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபரீத் அஹ்மத்தை பேட்டால் தாக்க சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், முதலில் ஃபரீத் அஹ்மத்தான் ஆசிப் அலி முகத்திற்கு அருகே போய் மோசமாக நடந்து கொண்டார். அவரின் முகத்திற்கு முன் கையை நீட்டி திமிராக கொண்டாடினார்.

    அதோடு ஆசிப் அலி திரும்பி செல்லும் போது அவரின் முதுகில் முட்டுவது போல ஃபரீத் அஹ்மத் நெஞ்சால் முட்டினார். இதனால் கோபம் அடைந்த ஆசிப் அலி, திரும்பி பார்த்து அவரை அடிப்பது போல சென்றார். இதற்கு அவரும் சண்டைக்கு வா என்று மல்லுக்கு நின்றார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆசிப் அலியும் பேட்டை தூக்கிக்கொண்டு அவரை தாக்குவது போல சென்றார். அதற்குள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் வந்து இரண்டு தரப்பிற்கும் சமாதானம் செய்தனர்.

    Also Read : அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தியதில் விக்கிபீடியாவுக்கு சம்மன்

    ஆட்டம் முடிந்த பின் பாபர் ஆஸாம் இருவரையும் சமாதானமாக செல்லும்படி கூறியதால் இரண்டு பேரும் கை குலுக்கி சமாதானமாகி சென்றனர். இந்த மோதல் காரணமாக ரசிகர்கள் இடையிலும் மோதல் ஏற்பட்டது. ரசிகர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். மைதானத்தில் ரசிகர்கள் இருக்கையில் மாறி மாறி இரண்டு அணி ரசிகர்களும் தாக்கிக்கொண்டனர்.



    பலர் சேர்களை வீசி எறிந்து கொடூரமாக சண்டை போட்டனர். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் நடுவே வீரர்கள் சண்டையில் ஈடுபட்டதும், மைதானத்தில் ரசிகர்களிடையே சண்டை ஏற்பட்டதும் அவ்வளவு ஆரோகியமான செயல் அல்ல என பல உலக ஜாம்பவான்கள் தெரிவித்து வருகிறார்கள்
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Afganistan, Asia cup cricket, Fight, Pakistan Cricketer

    அடுத்த செய்தி