PAK vs SA | குவிண்டன் டி காக் செய்கையில் ஏமாந்த ஃபக்கர் ஜமான் - ரன் அவுட் பின்னணியில் சுவாரஸ்யம்

PAK vs SA | குவிண்டன் டி காக் செய்கையில் ஏமாந்த ஃபக்கர் ஜமான் - ரன் அவுட் பின்னணியில் சுவாரஸ்யம்

ரன் அவுட் ஆன உலக சாதனை மன்னம் ஃபக்கர் ஜமான்.

சிக்சர் மழையில் ஜொகான்னஸ்பர்க் மைதானத்தை நனையவிட்ட உலக சாதனை மன்னன் ஃபக்கர் ஜமான் ரன் அவுட் ஆனது ஒரு விசித்திரமான சூழ்நிலையில் என்பது நேற்றைய அபார ஆட்டத்தின் சுவாரஸ்யமான ஒரு புள்ளியாகும்.

  • Share this:
சிக்சர் மழையில் ஜொகான்னஸ்பர்க் மைதானத்தை நனையவிட்ட உலக சாதனை மன்னன் ஃபக்கர் ஜமான் ரன் அவுட் ஆனது ஒரு விசித்திரமான சூழ்நிலையில் என்பது நேற்றைய அபார ஆட்டத்தின் சுவாரஸ்யமான ஒரு புள்ளியாகும்.

தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 341/6 என்று முடிக்க, பாகிஸ்தான் அணி மராத்தான் விரட்டலில் ஃபக்கர் ஜமானின் நம்ப முடியாத திகைப்பூட்டும் காட்டடியில் 324/9 வரை வந்து 17 ரன்களில் தோல்வி தழுவியது. இதன் மூலம் தொடர் 1-1 என்று சமன் ஆனது.

ஜொகான்னஸ்பர்கில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த சதங்களுல் ஒன்றை விளாசினார் பாகிஸ்தான் இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மென் ஃபக்கர் ஜமான்.

70 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்த பக்கர் ஜமான், பிறகு 107 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் சதம் கண்டார், ஆனால் அதன் பிறகு அவர் ஆடியது நம்ப முடியாத வகையறாவைச் சேர்ந்தது. அடுத்த 48 பந்துகளில் 93 ரன்களை விளாசி பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் அதுவும் தனிநபராக கொண்டு சென்று கொண்டிருந்தார்.

18 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் அவர் 155 பந்துகளில் 193 ரன்களை விளாசினார். அனைத்துக்கும் மேலாக இதுவரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச் சதங்களை இந்திய வீரர்கள் சச்சின், சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் அடித்துள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியிருக்கிறார் என்றால் அதுவும் பக்கர் ஜமான் தான். ஏற்கெனவே அவர் 210 நாட் அவுட் என்று இரட்டை அடித்துள்ளார். 2வது இரட்டைச் சதம் என்ற அரிய  சாதனையும் நேற்று தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக்கின் சாதுரியமான ஒரு செய்கையினால் 193 ரன்களில் ரன் அவுட் ஆகி முடிந்தது.

50வது ஓவரில் பாகிஸ்தான் எப்படியிருந்தாலும் ஜெயிக்க முடியாது ஏனெனில் 31 ரன்கள் தேவை, ஆனால் ஜமான் இரட்டை சதம் விளாச வாய்ப்பிருந்தது சயீத் அன்வர் சாதனை முறியடிக்கும் வாய்ப்பும் இருந்தது.



அப்போது லாங் ஆனுக்கு தட்டி விட்டு வேகமாக ரன்களுக்கு ஓடும்போது லாங் ஆன் பீல்டர் மார்க்ரம் பந்தை நேராக கீப்பர் முனைக்கு விட்டெறிந்தார். பகார் ஜமான் கிட்டத்தட்ட கிரீஸ் பக்கம் வந்து விட்டார், ஆனால் அப்போது குவிண்டன் டி காக் பவுலர் முனைக்கு அடி என்பது போல் செய்கை செய்ய, அதை ஓடி வந்து கொண்டே திரும்பிப் பார்த்தார் ஃபக்கர் ஜமான், இதனையடுத்து ஓட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது, பந்து நேராக விக்கெட் கீப்பர் முனை ஸ்டம்பை தாக்கியது மிக அருமையான த்ரோ.

ரன் அவுட் ஆனார் ஃபக்கர் ஜமான். அதாவது நேற்று ஃபக்கர் ஜமான் ஆடிய ஆட்டத்திற்கு அவரது விக்கெட்டை இப்படி வீழ்த்தினால்தான் உண்டு. அதனை டி காக் மிகச்சாதுரியமாக நிகழ்த்திக் காட்டினார். டி காக்கிற்கும் தெரியும் மார்க்ரமுக்கும் தெரியும். தென் ஆப்பிரிக்க பீல்டர்களின் முகங்களில் புன்னகை தவழ்ந்தது.

பவுலரிடம் லாங் ஆன் த்ரோ வருவதாக டி காக் செய்த செய்கையினால் ஃபக்கர் ஜமான் குழம்பிப் போய் திரும்பிப் பார்த்ததில் சில அடிகள் பின் தங்கி ரன் அவுட் ஆனார்.

ஃபக்கர் ஜமானின் இந்த இன்னிங்சுக்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Published by:Muthukumar
First published: