மைதானத்தில் காதலைத் தெரிவித்து காதலியை ஆரத்தழுவிய நபர்: இங்கிலாந்து-பாகிஸ்தான் டி20 போட்டியில் ருசிகரம்-வீடியோ

மைதானத்தில் காதல்.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்த ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது வீடியோவில் பதிவாகி வைரலாகி வருகிறது..

  • Share this:
    இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்த ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது வீடியோவில் பதிவாகி வைரலானது

    ஒரு நபர் தன் காதலை தன் காதலியிடம் மண்டியிட்டு தெரிவிக்க அது மைதானத்தின் பெரிய திரையில் குளோஸ்-அப்பில் பளீரென காட்டப்பட்டது. அப்போது பாகிஸ்தான் இன்னிங்சின் 10வது ஓவர். பிறகு இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர், முத்தமிட்டனர்.

    Also Read: India vs England | இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு- இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வலுவான அணி

    ஃபில் என்ற நபர் தன் காதலி ஜில் இடம் தன் காதலை தெரிவித்தார். பெரிய திரையில் ‘முடிவு நிலுவையில்’ அதாவது டிசிஷன் பெண்டிங்’ என்று ஏதோ 3வது நடுவர் தீர்ப்புக்கு வருவது போல் வந்ததை ரசிகர்கள் ஆரவாரத்துரன் ரசித்தனர். பிறகு பெரிய திரையில் ‘she said yes’ என்றுக் காட்டப்பட்டது.



    Also Read: Eng vs Pak| டி20: பாகிஸ்தானை கதற விட்ட இங்கிலாந்து- தொடரை வென்றது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாகிஸ்தான் இன்னிங்ஸ் ஆதில் ரஷீத் பந்து வீச்சில் மடிய, ஒருமுனையில் மொயின் அலி நசுக்க பாகிஸ்தான் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 36 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். ஆட்டம் பிறகு நெருக்கமாகச் சென்று கடைசி ஓவரில் இங்கிலாந்து வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
    Published by:Muthukumar
    First published: