சட்டோகிராமில் நடந்த பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் என்பதால் வெற்றிக்காக பாகிஸ்தான் அணி 12 புள்ளிகளைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் லிட்டன் தாஸின் அபார சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமின் 91 ரன்களினால் 330 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி அபிட் அலி என்ற தொடக்க வீரரின் 133 ரன்களுடன் 286 ரன்களே எடுத்தது, வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளை 116 ரன்களுக்குக் கைப்பற்றினார்.
ஆனால் தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஷாகின் அப்ரீடியின் ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரிடம் 5 விக்கெட்டுகளை கொடுத்து 157 ரன்களுக்கு காலியானது, இதனையடுத்து 202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 203/2 என்று வெற்றி பெற்றது, மீண்டும் தொடக்க வீரர் அபிட் அலி 91 ரன்களை விளாசினார், 9 ரன்களில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடிக்கும் சாதனை வாய்ப்பை இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபீக் 73 ரன்கள் எடுத்தார், இருவரும் ஆட்டமிழந்த பிறகு அசார் அலி (24), பாபர் ஆசம் (13) வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது.அபித் அலி 91 ரன்களிலும் , அப்துல்லா ஷபிக் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபிட் அலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், இவரும் அப்துல்லா ஷபீக்கும் முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் ஜோடி அமைத்ததோடு இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து அசத்தினர். இன்று 109/0 என்று தொடங்கியது பாகிஸ்தான், ஏற்கெனவே பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 111 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்ததால், இந்த முறை சரிவு அடையும் என்று வங்கதேசம் எதிர்பார்த்து கடும் நெருக்கடி கொடுத்தது.
ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சரேலென 2ம் இடத்திற்கு முன்னேறியது.
pls read this: நம்முடைய தேசத்திலேயே நிறவெறி பாகுபாடு- எல்.சிவராம கிருஷ்ணன், முகுந்த் ஓபன் டாக்
வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, “வங்காளதேசம் முதல் இன்னிங்சில் நன்றாக ஆடினர், ஆனால் ஹசன் அலி, ஷாகின் அப்ரீடி அபாரமாக வீசினர். டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே வீழ்ந்தாலும் எழுச்சி பெற ஒரு வாய்ப்பிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார் படுத்திக் கொள்ள அதிக நேரமில்லாவிட்டாலும் எங்களால் இயன்ற சிறந்த ஆட்டத்தை ஆடினோம். அபிட் அலி தனித்துவமான ஒரு பேட்ஸ்மென்”என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.