• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Pak vs Aus Semifinal| அரையிறுதிக்கு முன் மருத்துவமனை ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான்

Pak vs Aus Semifinal| அரையிறுதிக்கு முன் மருத்துவமனை ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான்

மருத்துவமனையில் ரிஸ்வான்

மருத்துவமனையில் ரிஸ்வான்

மேத்யூ ஹைடனும் இதை உறுதி செய்து, “முகமது ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நுரையீரல் சிகிச்சை பெற்றார். அவர் ஒரு போராளி. இந்தத் தொடரில் பிரில்லியண்ட் ஆக ஆடினார். அவரிடம் அசாத்திய தைரியமுள்ளது” என்று கூறியுள்ளார்.

  • Share this:
    பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு 2 நாட்கள் முன்பாக ஃப்ளூ காய்ச்சலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் நேற்று வந்து பிரமாதமான இன்னிங்ஸை ஆடியதை ஹீரோ என்று வர்ணித்துள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்.

    டி20 உலகக்கோப்பை 2021-லிருந்து பாகிஸ்தான் தோல்வி அடைந்து அரையிறுதியோடு நாடு திரும்புகிறது, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இறுதியில் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இறுதி என்ற பரமவைரி போட்டி பேசப்பட்டது, கடைசியில் ட்ரான்ஸ்-டாஸ்மேனிய ரைவல்ரிதான் இறுதிப்போட்டியாக அமைந்துள்ளது.

    பாகிஸ்தான் 6 போட்டிகளில் ஒன்றேயொன்றை மட்டும் தோற்று பெருமைமிக்க கர்வத்துடன் வெளியேறியது. இதில் பாகிஸ்தான் அணியின் ஹீரோவாகப் பார்க்கப்படுபவர் விக்கெட் கீப்பர்-தொடக்க பேட்ஸ்மென் முகமது ரிஸ்வான் ஆவார். 6 போட்டிகளில் 281 ரன்களை விளாசியுள்ளார் ரிஸ்வான். பாபர் ஆசமுக்குப் பிறகு (303 ரன்கள்) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறார் ரிஸ்வான்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஃப்ளூ காய்ச்சலுக்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் நேற்று இறங்கி 52 பந்துகளில் 67 ரன்களை 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் எடுத்தார் ரிஸ்வான். துபாய் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

    ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படத்தையும் பகிர்ந்த ஷோயப் அக்தர், “உங்களால் நம்ப முடிகிறதா, இவர் இன்று நாட்டுக்காக ஆடி பெரிய பங்களிப்பு செய்ததை? கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஹீரோ ரிஸ்வான்” என்று பதிவிட்டுள்ளார்.



    போட்டிக்கு முன்பாக ரிஸ்வான் ஆடுவதே சந்தேகமாகத்தான் இருந்தது. நுரையீரல் பிரச்சனையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேத்யூ ஹைடனும் இதை உறுதி செய்து, “முகமது ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நுரையீரல் சிகிச்சை பெற்றார். அவர் ஒரு போராளி. இந்தத் தொடரில் பிரில்லியண்ட் ஆக ஆடினார். அவரிடம் அசாத்திய தைரியமுள்ளது” என்று கூறியுள்ளார்.

    ரிஸ்வானின் இந்த உடல் நிலை மற்றும் அவரது தைரியமான இன்னிங்ஸ் அதுவும் பிரமாத ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுக்கு எதிராக என்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி ரிஸ்வான் பாகிஸ்தானின் புதிய ஹீரோவாகியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: