பாபர் அசாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு நாட்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்து பாகிஸ்தானை பாதுகாப்பின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றார்; மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுக்க கராச்சி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. லாகூரில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
கோலியுடன் ஒப்பிடப்பட்டு பொதுவாக இந்திய ஊடகங்களால் மட்டம்தட்டும் பாபர் அசாம் 10 மணி நேரம் பேட் செய்து நாட்டை தோல்வியிலிருந்து காப்பாற்றியுள்ளார், நம் விராட் கோலி 10 நிமிடங்கள் கிரீசில் நிற்பதே வரவர அரிதாகி வருகிறது.
பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி நாள் மாரத்தான் இன்னிங்ஸுக்குத் தலைமை தாங்கினார், அவரது 196 ரன்கள் எடுக்க இரட்டைச் சதம் எடுக்க முடியாமல் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 172 ஓவர்களில் பேட்டிங் செய்ய உதவியது பாபர் அசாமின் மாரத்தான் இன்னிங்ஸ்தான். இதனால் இரண்டாவது டெஸ்ட் வியத்தகு முறையில் ட்ரா ஆனது.
இந்த தார்ச்சாலை பிட்சில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை 148 ரன்களுக்குச் சுருட்டியும் நேற்று பாகிஸ்தானை 2வது இன்னிங்ஸில் கடைசியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்ததும் ஆஸ்திரேலியாவின் மன உறுதியையும் பிட்ச் பற்றி எந்த கவலையுமில்லை, வெற்றியே குறிக்கோள் என்று ஆடியதும் ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவையும் மீறிய தார்மீக வெற்றியைக் கொடுத்ததாகவே கருத வேண்டும்.
பாபர் அசாம் ஆட்டமிழந்தவுடன் டெஸ்ட் முடிய இன்னும் 12 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி நம்பிக்கை பிறந்தது. மேலும் இரண்டு விரைவான விக்கெட்டுகள் பாகிஸ்தானை 414-7 ஆக டென்ஷனை ஏற்றின. ஆனால் ஆட்டமிழக்காத முகமது ரிஸ்வான் (104) பாகிஸ்தானை பாதுகாப்பாக மீட்டார். ஆஸ்திரேலியா தொடரில் இரண்டாவது முறையாக முறியடிக்கப்பட்டது.
21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை உள்ளடக்கிய பாபரின் கம்பீரமான இன்னிங்ஸ் 27 வயது இளைஞரின் வாழ்க்கையில் சிறந்த மற்றும் பாகிஸ்தான் பேட்டருக்கான அதிகபட்ச தனிப்பட்ட நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோராக அமைந்தது. , 2015 இல் இலங்கைக்கு எதிராக யூனிஸ் கானின் 171 நாட் அவுட் ரன்களை முறியடித்தது.
பாபர் அசாமுக்கு அடுத்தடுத்து சிலி மிட் ஆஃப் மற்றும் சிலி மிட் ஆன் ஆகிய இடங்களில் வரிசையாக 2 கேட்ச்கள் விடப்பட்டன. நம்மூரில் கோலிக்கு கேப்டனாக இருந்த போது எல்.பி. தர மாட்டார்கள் அதே போல் பாபர் அசாம் ஒருமுறை பிளம்ப் ஆனால் நடுவர் தரவில்லை என்பதால் அம்பயர்ஸ் கால் ஆனது.
கடைசி நாள் 192-2 இல் தொடங்கி, பாகிஸ்தானின் சவால் ட்ரா செய்வதாகும். பாபர் அசாம் உதாரண புருஷனாக வழிநடத்தினார். 443-7 ரன்களை முடித்தபோது அது எல்லா நேரத்திலும் ஆறாவது அதிகபட்ச நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோராக அமைந்தது. சாதனை வெற்றி இலக்கை பாகிஸ்தானுக்கு எட்ட முடியவில்லை, ஆனால் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக்குடன் (96) பாபரின் மராத்தான் 228 ரன் பார்ட்னர்ஷிப் அவர்களை போட்டியில் தக்க வைத்தது.
நாதன் லயன் (4-112) கடைசி அமர்வில் புதிய நாடகத்தை புகுத்தினார், பாபர் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர், ஆனால் ஆஸ்திரேலியாவின் ராவல்பிண்டியில் நடந்த தொடக்க டெஸ்ட்டைப் போலவே வெற்றியை ஈட்ட முடியவில்லை.
என்னதான் பாகிஸ்தான் தார்ச்சாலை பிட்சில் பெருமைப் பட்டாலும் ஆஸ்திரேலியா இதை ஒரு மேட்ச்சாக டெஸ்ட் மேட்சாக மாற்றியது. முதல் இன்னிங்சில் மிட்செல் ஸ்டார்க், இரண்டாவது இன்னிங்ஸில் நேதன் லயன் ஆகியோர் இதனை ஒரு சவாலாக மாற்றினர். அந்த விதத்தில் இந்த செத்தப் பிட்சிலும் வெற்றிக்கான உந்துதலையும் உற்சாகத்தையும் வரவழைத்த ஆஸ்திரேலியாவுக்கே ஹேட்ஸ் ஆஃப், அந்த அணிக்கே தார்மீக வெற்றி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, Pakistan Vs Australia