இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முந்தைய கேப்டன் ஜோ ரூட்டுக்கும் தனக்கும் எந்த வித சண்டையும் இல்லை, நாங்கள் நண்பர்கள் என்று கூறுகிறார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
ஆஷஸ் தொடரில் பிராடை உட்கார வைத்தார் ஜோ ரூட், பிறகு மே.இ.தீவுகள் பயணத்தின் போதும் ஆண்டர்சன், பிராட் வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஆனால் தோற்றுத் திரும்பினார், தோல்வியினால் ரூட்டின் புதுமையான முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
பிராடும் ஒன்றிரண்டு பேட்டிகளில் தனக்கு வாய்ப்பளிக்காதது குறித்து தன் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால் இதே பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சில சக்திகள் சேர்ந்துதான் கெவின் பீட்டர்சன் என்ற பெரிய பிளேயரை அவமானப்படுத்தி ஓய்வு பெற வைத்தனர்.
இந்நிலையில் புது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக இருக்கிறார், ஆண்டர்சன், பிராட் மீண்டும் அணிக்குத் திரும்பினர், நன்றாக வீசினர், நியூசிலாந்தை லார்ட்ஸில் வீழ்த்தினர்.
இந்நிலையில் ஸ்டூவர்ட் பிராட், கூறும்போது, “ஜோ ரூட்டும் நானும் அவர் கேப்டன்சியிலிருந்து இறங்கியதும் நீண்ட நேரம் பேசினோம். ஒரு கேப்டனாக அவர் எனக்கு எப்படி முக்கியமானவர் என்று நான் அவரிடம் கூறினேன்.ரூட் கேப்டன்சியில் ஆடுவது ஒரு பெரிய சிறப்புரிமை.
அடுத்து வரும் நாட்களை அவர் மகிழ்வுடன் எதிர்கொள்வார் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். இப்போது அவருக்கு பிரஷர் இல்லை, ஏற்கெனவே அவர் பேட்டிங் லெஜண்ட் வரிசையில் இணைந்து விட்டார்.
நானும் ஜோ ரூட்டும் பெரிய நண்பர்கள். நான் எப்போதும் ஆட்டத்தையும் கேளிக்கையையும் பிரித்துப் பார்ப்பவன். என்னை அணியில் எடுக்கவில்லை என்பதற்காக ஒருவரிடம் சண்டைபிடிக்கும் ஆளல்ல நான். அப்படிச் செய்தால் அது பெரிய வேதனையாகப் போய் முடியும்.” என்றார் ஜோ ரூட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, Joe Root