Video: பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் பவுலர் படுகாயம்!

Pacer #AshokDinda suffers horrific injury | அசோக் டிண்டா, 115 முதல் தர போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

news18
Updated: February 11, 2019, 4:59 PM IST
Video: பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் பவுலர் படுகாயம்!
அசோக் டிண்டா படுகாயம். (Twitter)
news18
Updated: February 11, 2019, 4:59 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டாவின் முகத்தில், பேட்ஸ்மேன் அடித்த பந்து பலமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில அணிகள் மோதும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் அசோக் டிண்டா. அண்மையில் ரஞ்சி டிராபி முடிந்த நிலையில், வரும் 16-ம் தேதி சையது முஸ்டாக் அலி டிராபி தொடர் தொடங்க உள்ளது.

Ashok Dinda, அசோக் டிண்டா
வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா. (AFP)


இதற்காக, ஈடென் கார்டன் மைதானத்தில் மேற்கு வங்க மாநில கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின்போது, வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா அசுர வேகத்தில் பந்தை வீசிக்கொண்டிருந்தார். அதில், ஒரு பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் விவேக் சிங் தூக்கிய அடித்தார். ஆனால், பந்தானது பந்துவீச்சாளர் அசோக் டிண்டாவின் முகத்தில் பலமாக தாக்கியது.

இதனால், நிலைகுலைந்து போன டிண்டா, உடனே தரையில் சரிந்தார். இதனைப் பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக டிண்டா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்ததாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.



அசோக் டிண்டா, இந்திய அணிக்காக 13 ஒரு நாள் மற்றும் 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 115 முதல் தர போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

Also Watch..

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...